திணறிய திருச்சி; நாகையில் 20-ம் தேதி விஜய் பிரச்சாரம்; கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி
திணறிய திருச்சி; நாகையில் 20-ம் தேதி விஜய் பிரச்சாரம்; கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த வாரம் பிரச்சாரத்தைத் தொடங்கிய நிலையில், வரும் சனிக்கிழமை நாகையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
கடந்த வாரம் திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் நாகையில் புத்தூர் பகுதியில் பேச விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தன்னார்வலர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது காவல்துறை.
இந்த நிலையில் இன்று காலை தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் சாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏழு இடங்களில் ஒரு இடமான புத்தூர் ரவுண்டானா பகுதியை தேர்வு செய்து காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
இதற்கு பல கட்ட நிபந்தனைக்கு உட்பட்டு காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் வரவேற்பு அளிக்கப்பட்டு, நாகூர் நகரில் நுழைந்து அமிர்தா வித்யாலயா சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலையை கடக்க வேண்டும் எனவும், பின்னர் புத்தூர் ரவுண்டானாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சிக்கல், கீழ்வேளூர் வழியாக விஜய் திருவாரூர் மாவட்டத்தை சென்றடைவார். திருச்சி பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களால் இடையூறு ஏற்பட்ட நிலையில் நாகை நகருக்குள் விஜய்க்கு அனுமதி மறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்தி பிரச்சாரத்தை மேற்கொள்ள காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, நாகை, திருவாரூர் மாவட்ட செயலாளர்களுடன் தவெக தலைவர் விஜய் மற்றும் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0