திருச்சியில் மோடி உருவப்பொம்மை எரிப்பு :இடதுசாரிகள் போராட்டத்தால் பரபரப்பு

Oct 10, 2026 - 18:58
Oct 10, 2026 - 19:11
 0  79
திருச்சியில் மோடி உருவப்பொம்மை எரிப்பு :இடதுசாரிகள் போராட்டத்தால் பரபரப்பு

திருச்சியில் மோடி உருவப்பொம்மை எரிப்பு :இடதுசாரிகள் போராட்டத்தால் பரபரப்பு

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கைது செய்யப்பட்டதையும், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும், முற்றுகையிட்டதை கண்டித்தும்  ஒன்றிய பா.ஜ.க. அரசு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.  

​டெல்லியில் கைது செய்யப்பட்ட சி.பி.எம் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் இடதுசாரி கட்சிகள் சார்பில் இன்று மாலை தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் மோடி உருவப்பொம்மை மற்றும் உருவப்படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம் மாநகர் மாவட்ட செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம், சிபிஐ மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, சிபி.ஐ.(எம். எல் ) மாவட்ட செயலாளர் ராஜ்குமார்  ஆகியோர் தலைமை தாங்கினார். ​இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0