மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம், பயிற்சி தொகையை வழங்கிட வேண்டும்-தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம், பயிற்சி தொகையை வழங்கிட வேண்டும்-தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மதிப்பூதியத்தையும், பயிற்சி தொகையையும் உடனடியாக வழங்கிட வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த விபரம் வருமாறு ;
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் மாநில பொருளாளரும், திருச்சி மாவட்ட தலைவருமான நீலகண்டன் மாவட்ட ஆட்சியரிடம் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :-
தேசியப் பணியான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணி ஆகஸ்ட் 1 முதல் தொடங்கி ஆகஸ்ட் 31 வரை நடைபெற்றது.
இந்தப் பணியை செவ்வனே முடிக்க ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
கற்பித்தல் பணியையும் பார்த்துக் கொண்டு ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம மற்றும் நகரப் பகுதிகளுக்கு சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்டப் பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆகஸ்ட் 25 -ந் தேதியே முடித்து கொடுத்தனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அரசாணையில், முதல் கட்ட பணியை முடித்தவுடன் அதற்கான மதிப்பூதியம் ரூபாய் ஒன்பதாயிரம் மற்றும் பயிற்சித் தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நேரத்துக்கு முன்பாகவே முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புபணியை முடித்த ஆசிரியர்களுக்கு ஒரு மாத காலத்துக்கு மேலாகியும் அதற்கான மதிப்பூதியம் வழங்கப்படவில்லை
அதனை விரைந்து வழங்கிட திருச்சி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கண்டவாறு மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளரும், திருச்சி மாவட்ட தலைவருமான நீலகண்டன் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0