நிலத்தை அபகரிக்க முயற்சி : போலீசார் விசாரணை
நிலத்தை அபகரிக்க முயற்சி : போலீசார் விசாரணை
சேலம் மாவட்டம் காரிப்பட்டி காவல் நிலையத்தில் அனித்குமார் என்பவர் தன்னை மிரட்டி நிலத்தை அபகரிக்க குண்டர்கள் முயல்வதாக புகார் கொடுத்துள்ளார்.
அவர் காவல் நிலையத்தில் கொடுத்திருக்கும் புகார் மனுவில், நான் முகவரியில் வசித்து வருசிறேன். எனது சொந்த பட்டா இடத்தில் (பட்டா எண் : 335 ச.வே. எண் : 120/1A1) நீதிமன்ற தீர்ப்பானை வழங்கியபின் (06-48/2020, CNR NO: TNGAIB0002542020) DR ஜெயகுமார், அவரது மனைவி அலரது மகன் ராம்குமார் ஆகிய மூவரும் 20 குண்டர்களை அழைத்த வந்து எங்களை கொலை செய்தவிடுவதாக மிரட்டுகிரார்கள்.
அதன்பிறகு காரிப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காலவர்களை பார்த்ததும் 20 குண்டர்களும் தப்பி ஓடிவிட்டனர் இவர்களை பிடித்து விசாரித்து வழக்கு பதியுமாறும், தங்கள் குடும்பத்தை குண்டர்களிடமிருந்து பாதுகாத்திடுமாறு எஸ் என் மங்கலத்தைச் சேர்ந்த அனித்குமார் புகார் கொடுத்துள்ளார்.
மேற்கண்ட புகாரின் அடிப்படையில் காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0