கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் இறந்த 41 பேருக்கு நாளை முதலாம் ஆண்டு நினைவஞ்சலி : முதல்வரை எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்கள்
கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் இறந்த 41 பேருக்கு நாளை முதலாம் ஆண்டு நினைவஞ்சலி : முதல்வரை எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்கள்
தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதலமைச்சருமான விஜய் கடந்த ஆண்டு(2025) செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் வரை காயமடைந்தனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. இந்த சம்பவம் நடைபெற்று நாளை 27-ந்தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது.
கரூரில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயம் டைந்தவர்கள், அப்பகுதியில் கடை வைத்துள்ளவர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், டாக்டர்கள், போலீசார், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், வழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருந்த தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரும் கரூர் சிபிஐ அலுவலகத்திலும், தொடர்ந்து டில்லி சிபிஐ அலுவலகத்திலும், இவர்களை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உட்பட டில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
அதனைத் தொடர்ந்து விஜய், மூன்று முறை விஜய், டில்லி சிபிஐ அலுவலகத் தில் விசாரணைக்கு ஆஜரானார். அதுபோல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும் ஒரு முறை டில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
இச்சம்பவத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள், பல்வேறு கட்சிகள் நிதி உதவி அளித்தனர். கடந்த ஓராண்டாக விசாரணை நடந்து வரும் இந்த வழக்கில், இப்போதுவரை சிபிஐ குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய வில்லை.
இந்நிலையில் இந்த துயர சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினர் பல்வேறு அரசியல் கட்சியினர் இறந்தவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு நாளை அனுஷ்டிக்க உள்ளனர். அதன்படி கூட்ட நெரிச லில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் படத்திற்கு அஞ்சலி செய்யும் நிகழ்வு நாளை காலை கரூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே நடைபெறவிருக்கிறது.
இதற்கிடையே கரூரில் நடக்கும் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்று நினைவு சின்னத்துக்கு அடிக்கல் நாட்டி 41 பேருக்கு மலரஞ்சலி செலுத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக விஜய் பதவி ஏற்ற பின்னர் கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி கரூருக்கு வந்தார். அப்போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் 31 பேருக்கு அரசு பணிகளுக்கான ஆணைகளை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும், அன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசியபோது, கரூர் சம்பவத்தில் இறந்த 41 பேரின் நினைவாக வேலுசாமிபுரத்தில் ஒரு நினைவு சின்னம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
ஆனால், இடைத்தேர்தலால் விஜய் வருகை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தபோதும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் விஜய்யின் வருகையை எதிர்பார்த்திருந்தனர் என்பதும், அதேநேரம் நாளை மறுதினம் 28ஆம் தேதி மதுரையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை துவக்கி வைத்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழக முதல்வர் விஜய் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0