பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்: மூன்று நாள் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக அமையும்-பிரேமலதா
பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்: மூன்று நாள் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக அமையும்-பிரேமலதா
தமிழ்நாடு கனரா வங்கி பணியாளர்கள் சங்கத்தின் 4-வது மாநில மாநாடு, திருச்சியில் இன்று நடைபெற்றது.
கனரா வங்கி பணியாளர்கள் சங்க தலைவர் சிவலிங்கம் மாநாட்டு கொடியை ஏற்றிவைத்து மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ் துவக்கவுரையாற்றினார்.
கனரா வங்கி பணியாளர் சங்க செயலாளர் வெங்கடேஷ், பிஇஎப்ஐ பொதுச் செயலாளர் சுனில்குமார், இணைச் செயலாளர் புவனேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டில் வங்கி துறையில் வாரம் 5 வேலை நாட்கள் பணியினை அமல்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை மேம்படுத்த வேண்டும். வங்கிப் பணியில் அனைத்து மட்டங்களிலும் தேவைக்கேற்ப ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும். நியாயமான மற்றும் வெளிப்படையான இடமாற்றல் கொள்கையை கொள்கையை அமல்படுத்த வேண்டும். தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். துணைநிலை ஊழியர்களின் பிரச்சினைகளில் தீர்வு காண வேண்டும். வங்கி பெண் ஊழியர்களுக்கான அடிப்படை கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் கனரா வங்கி பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் நன்றி கூறினார். பிறகு தமிழ்நாடு கனரா வங்கி பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது ;
வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தை நீர்த்து போக செய்யவே நாளை ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. நாளை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்கள் வங்கிக்கு செல்வார்கள். அதே நேரத்தில் 28 -30 வரை நடைபெறும் மூன்று நாள் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக அமையும். வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு தான், அதே நேரத்தில் நாங்கள் அவர்களுக்கு செய்யும் சேவையை மனதில் கொண்டு பொதுமக்கள் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு தான் அதே நேரத்தில் நாங்கள் அவர்களுக்கு செய்யும் சேவையை மனதில் கொண்டு பொதுமக்கள் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு கனரா வங்கி பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0