அதிமுக சார்பில் வெற்றி பெற்று தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் - பொன் ராதாகிருஷ்ணன் 

Sep 25, 2026 - 17:38
 0  3
அதிமுக சார்பில் வெற்றி பெற்று தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் - பொன் ராதாகிருஷ்ணன் 

அதிமுக சார்பில் வெற்றி பெற்று தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் - பொன் ராதாகிருஷ்ணன் 

அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் த.வெ.க சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும், இல்லை என்றால் தமிழர்கள் மானம் இல்லாதவர்கள் என அர்த்தம் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் சீரா தோப்பில் உள்ள இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் நினைவிடத்தில் அவருடைய உருவ சிலை திறப்பு விழா என்று நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது;

ஜெம் வீரமணி விவகாரத்தில் ஒரு அரசை மட்டும் குற்றம் சொல்வது பயனில்லாதது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக அந்த தவறு நடைபெற்று வந்துள்ளது. ஒரு ஆட்சியில் மட்டும்தான் நடந்ததாக நாம் கூற முடியாது. 

ஜெம் வீரமணி பாலியல் தொழிலிலும் ஈடுபட்டிருக்கலாம், இந்த விவகாரத்தில் ஈவு இரக்கம் பார்க்கக்கூடாது. கடுமையான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்க வேண்டும்.

இதன் பின்னால் யார் யார் பயன் பெற்றார்கள் என்பதையும் நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தை எந்த அமைப்பு விசாரித்தாலும் குற்றவாளிகள் தப்பவே கூடாது. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் எப்போதுமே அவமானமான விஷயம்.

தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய விஷயம், அது என்ன தீர்ப்பு வருகிறதோ அதை பார்த்த பின்பு கருத்து கூறலாம்.

நான் 10 பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளேன். 8 தேர்தலில் தோல்வி அடைந்துள்ளேன் அதற்காக எட்டு தேர்தலையும் மறு தேர்தல் வைக்க வேண்டும் என கேட்க முடியுமா ?

எஸ்.ஐ.ஆர் பல காலங்களில் நடந்துள்ளது. இதை தேர்தல் அதிகாரி மட்டும் நடத்த முடியாது. இந்தியாவில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது பூத் வரை நடத்தப்பட்டது தான் எஸ்ஐஆர். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அதிகாரிகள் இதை எப்படி செய்தார்கள் என்பதை ஆராய வேண்டும்.

போலியான வாக்குகள், இறந்தவர்களின் வாக்குகள் நீக்கப்பட வேண்டுமா? வேண்டாமா ?

ஒரு சில இடங்களில் தவறு நடந்து இருக்கலாம், அந்த தவறை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதுதான் ஆராயப்பட வேண்டும்.

வெற்றி பெற்றவர்கள் ஒரு மாதத்தில் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றால் இதற்கென்று தனி சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். எம்எல்ஏக்கள் இதுபோல் ராஜினாமா செய்தால் அவர்கள் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்கிற ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

இதை குதிரை பேரம் என்கிறார்கள், குதிரை பேரம் மட்டும் அல்ல இது கழுதை பேரம், கழுதை பேரம் என கூறி கழுதையை கேவலப்படுத்த கூடாது. அதை விட கீழானவர்கள்.

இந்த இடைத்தேர்தலில் யார் வென்றாலும் பரவாயில்லை என நான் கூற மாட்டேன். ஏற்கனவே அதிமுக வெற்றி பெற்ற தொகுதி மீண்டும் அங்கு அதிமுக போட்டியிடுகிறது அவர்கள் தான் வெற்றி பெற வேண்டும். அதிமுக சார்பில் வெற்றி பெற்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் வேறு கட்சியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே தமிழன் மானமுள்ளவன், சூடு சொரணை உள்ளவன் என்பது என்னுடைய கருத்து.

பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளின் இடைத்தேர்தல் ஆதரவு முடிவு குறித்தான கேள்விக்கு,

அடுத்து வரக்கூடியது 2029-ல் பாராளுமன்ற தேர்தல்தான். அந்த நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கலாம் அதற்கிடையே அந்தந்த கட்சிகள் அவர்கள் கட்சியின் வளர்ச்சியில் தான் பார்ப்பார்கள். 

விடுதி மாணவர்களுக்கு பீஃப் வழங்க பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் வன்னி அரசு பேசியிருப்பது அவர் எங்கோ கான்ட்ராக்ட் எடுத்திருக்கிறார் என்பது தான் அர்த்தம் இது குறித்து முதல்வர் விசாரிக்க வேண்டும்.

ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் மாட்டிறைச்சி தின்பார்கள் என கூறுவார்கள். ஆனால், இன்று அனைத்து சமூகத்தினரும் மாட்டிறைச்சி உண்கிறார்கள்கிறார்கள்.

ஆனால், அமைச்சர் வன்னியரசு கூறுவது வேறு விதமாக உள்ளது. அவர் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. அவர் சமூக நீதித்துறைக்கு தகுதி இல்லாத அமைச்சராக இருக்கிறார் என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0