கேகே நகர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

Sep 24, 2026 - 09:49
Sep 24, 2026 - 09:49
 0  8
கேகே நகர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

கேகே நகர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

திருச்சி கேகே நகர் இந்திரா நகர், அலமேலு மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது.

தினமும் பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஸ்ரீனிவாச பெருமான் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என்ற பக்திகோஷம் முழங்கியபடியே, தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர், 4 மாட வீதிகளிலும் சுற்றி வந்து நிலையை அடைந்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வடம் பிடித்தனர். திருச்சி ஸ்ரீகாளிதாஸ் குழுவினரின் நாதஸ்வர இசையும் நடந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0