புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கிய திருச்சி காங்கிரஸார்
புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கிய திருச்சி காங்கிரஸார்
முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது;
காங்கிரஸ் உறவாடி கெடுக்கும் என நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார் என்ற கேள்விக்கு?
நாங்கள் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் போது எத்தனை ஆட்சியை கவிழ்த்து இருக்கிறோம். ஆனால் இவர்கள் அருணாச்சல பிரதேசத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் அதை முடக்கினார்கள்
மக்கள் தீர்ப்புக்கு பிறகு எங்களது ஆட்சியை கவிழ்த்தார்கள் கவிழ்த்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்தார்கள்.
பொம்மையின் தீர்ப்புக்கு பிறகு எந்த சம்பவமும் நடக்கவில்லை வரலாறு தெரியாமல் பாஜக பேசி வருகிறது அவர் வரலாற்றை படிக்க வேண்டும் என்றார்.
பிளாட்பாரத்தில் உள்ளவர்களுக்கு ஓட்டுரிமை கொடுத்துள்ளோம், அவர்களுக்கு வீட்டு முகவரி இல்லை என்கின்றனர். ஆனால் மோடி வீடு இல்லாதவர்களே இல்லை என தெரிவித்தார், அவர்கள் பேசுவதை அவர்களே கவனிப்பது இல்லை.
எங்கள் தலைவர் ராகுல்காந்தி ஜனநாயகத்திற்காக தொடர்ந்து குரல்கொடுத்து கொண்டுள்ளார். இந்த மக்களுக்கும் கடைசி நம்பிக்கையாக உள்ளது வாக்குரிமை அந்த வாக்குரிமையை பறிக்காதீர்கள் என்று மக்கள் முகமாக மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் குரல்கொடுத்து கொண்டுள்ளார்.
பாமக குறித்து கேட்ட கேள்விக்கு?
அது தந்தை மகனுக்கான பிரச்சனை உட்கட்சி பிரச்சனை நாம் ஒன்றும் கருத்து சொல்வதற்கு இல்லை என தெரிவித்தார்
துணை ஜனாதிபதி தேர்தலில் 12 பேர் மாற்றி வாக்கு அளித்து உள்ளனர் என்ற கேள்விக்கு?
யார் அப்படி வாக்கு அளித்தார்கள் என தகவல் இல்லை அதை பத்திரிகையாளர்கள் அவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்கள் யார் வாக்களித்து இருக்கிறார்கள் செல்லாத ஓட்டு 14 என கூறுகிறார்கள், அதை நீங்கள் கண்டுபிடித்து தர வேண்டும் என தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கை திட்டம் ஏற்புடையது அல்ல என கூறி கையெழுத்து போடவில்லை எனவே அவர்கள் பாஜகவின் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்தார்.
விஜய் காங்கிரஸ் கட்சி குறித்து விமர்சனம் வைக்கவில்லை, காங்கிரசை கூட்டணிக்கு கொண்டுவர திட்டமா? என்ற கேள்விக்கு,
அது குறித்து எங்களது அகில இந்திய தலைமை தான் தீர்மானிக்கும் அவர் காங்கிரசை திட்டாதாதற்கு காரணம் காங்கிரசை திட்ட ஒன்றும் இல்லை. காங்கிரஸ் தான் அடிப்படை ஆதாரங்களை மக்களுக்கு ஏற்கனேவே கொடுத்து உள்ளது என தெரிவித்தார்
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0