அரசியல் நெருக்கடிகளைத் தாண்டி, சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புகளின்படியே காவிரியில் நீர் திறப்பை ஆணையம் மேற்கொள்ள வேண்டும் - பிஆர்.பாண்டியன் 

Sep 21, 2026 - 15:12
 0  33
அரசியல் நெருக்கடிகளைத் தாண்டி, சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புகளின்படியே காவிரியில் நீர் திறப்பை ஆணையம் மேற்கொள்ள வேண்டும் - பிஆர்.பாண்டியன் 

அரசியல் நெருக்கடிகளைத் தாண்டி, சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புகளின்படியே காவிரியில் நீர் திறப்பை ஆணையம் மேற்கொள்ள வேண்டும் - பிஆர்.பாண்டியன் 

மேகதாது அணை கட்டுமானத்தைத் தடுத்திடவும், ராசிமணலில் அணை கட்டத் திட்டமிடவும், தமிழகத்தை வறட்சியிலிருந்து மீட்டெடுக்கவும் வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மேற்கொண்டுள்ள பிரச்சாரப் பயணம் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் நேற்று தொடங்கியது.

இந்தப் பயணம் காரைக்கால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, சேலம், ஒகேனக்கல், காஞ்சிபுரம், சென்னை எழும்பூர், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் வழியாகச் சென்று செப்டம்பர் 24-ஆம் தேதி திருவாரூரில் நிறைவடைகிறது. 

இந்நிலையில், இன்று திருச்சி வந்தடைந்த இந்தப் பிரச்சாரக் குழுவினருக்கு, சிந்தாமணி அண்ணாசிலை அருகே, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் தர மறுக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 6000 கண்ணாடி நீர் தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. ஒட்டுமொத்தமாக அணைகளை மூடிவிட்டார்கள். காவிரி டெல்டா வறண்டு போய் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடியை இழந்து விட்டோம். 

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்க வேண்டியது காவிரி மேலாண்மை ஆணையத்தின் பொறுப்பாகும். ஆனால், ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா ஏற்க மறுத்துள்ள நிலையில், ஆணையமும் மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, உச்சநீதிமன்றத்திற்கு இணையான அதிகாரங்கள் உள்ளன. 

மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப் பகிர்வு மற்றும் அணைகளைக் கண்காணிக்கும் முழு அதிகாரம் ஆணையத்திற்கு உண்டு. வினாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா ஏற்க மறுப்பதை ஆணையம் வேடிக்கை பார்க்கக் கூடாது. மத்திய அரசின் உதவியை நாடி, கர்நாடகத்திடமிருந்து தண்ணீரைத் திறந்துவிட வேண்டியது ஆணையத்தின் கடமையாகும். 

அரசியல் நெருக்கடிகளைத் தாண்டி, சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புகளின்படியே காவிரியில் நீர் திறப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 15 ஆண்டுகளாக காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்ற நிலையில், எந்தவொரு அரசியல் நெருக்கடியினாலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த முடியாது.

முதலமைச்சர் விஜய் அங்கு செல்வதைத் தடுத்து, கர்நாடக முதலமைச்சரை தமிழகத்திற்கு வருமாறு வலியுறுத்தினோம். இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் தனது சட்டப்பூர்வ அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தி, தமிழகத்திற்கான நீரைப் பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது விவசாய சங்க பிரதிநிதிகள் திரளாக பங்கேற்றிருந்தனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0