டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு கூடுதல் பணி சுமை; சீருடை ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டும் - அரசுக்கு விற்பனையாளர்கள் கோரிக்கை
டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு கூடுதல் பணி சுமை; சீருடை ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டும் - அரசுக்கு விற்பனையாளர்கள் கோரிக்கை
தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தின், சில்லரை மதுக்கடைகளில், 20,000க்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பாட்டிலுக்கு பத்து ரூபாய் பிரச்சனை பூதகரமாக விவாத பொருளான நிலையில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் சம்பள உயர்வும் கடந்த மாதம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் மேற்பார்வையாளர்களுக்கு, வெளிர் நீல நிறத்தில் சட்டை மற்றும் அடர் நீல நிறத்தில் பேன்ட் வழங்கப்பட உள்ளது. அதே போல், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு, வெளிர் பழுப்பு நிற சட்டையும், அடர் சாம்பல் நிற பேன்ட்டும் வழங்கப்பட உள்ளது. இதற்கான மாதிரி புகைப்படத்தை, டாஸ்மாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டது. நவ.15 முதல் புதிய சீருடை அமலுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாவதாகவும் தொடர் இன்னல்களை சந்திப்பதாகவும் கூறி திருச்சி மாவட்ட டாஸ்மாக் மண்டல அலுவலரிடம் டாஸ்மாக் விற்பனையாளர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், விற்பனையாளர் மட்டும் டாஸ்மாக் பணியாளர்களா? கடந்த 2003 ஆம் ஆண்டு வெறும் விற்பனை மட்டும் செய்து வந்தோம், இப்போது லோடு இறக்கும்போது ஒரு ஸ்கேனிங், விற்பனை செய்யும்போது ஒரு ஸ்கேனிங் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.
காலி மது பாட்டில்களை வாங்க வேண்டும், ஜிபே மற்றும் கூட்ட நேரத்தில் ஸ்கேனிங் செய்யாமல் கொடுத்த பாட்டில்களை மறுநாள் வந்து ஸ்கேன் செய்ய வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 12 மணி நேரம் விற்பனையாளர் மட்டும் பணியில் இருக்கிறார்கள்.
மேற்பார்வையாளர்கள் எப்போதும் போல் அவர்களது பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். விற்பனையாளருக்கு மட்டும் கூடுதல் பணி சுமை ஏற்படுகிறது. இது வேதனை அளிக்கின்றது. வயது 50 கடந்து விட்டது, நாங்கள் மட்டும் எப்படி செய்வது?
இன்று தமிழக அரசு டாஸ்மாக் பணியாளருக்கு என்று தானே ஊதிய உயர்வு அளித்துள்ளது. இதில் மேற்பார்வையாளர் விற்பனையாளர் அனைவருக்கும் சரிசமமாக சராசரியாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் விற்பனையாளருக்கு பணி கூடுதல் சுமை, மேற்பார்வையாளர்களுக்கு வழக்கம்போல் மேலோட்டமான பணி ஏற்புடையதல்ல. மேற்பார்வையாளர்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?
டாஸ்மாக் பணியாளர் என்றாலே அனைவரும் பணியாளர் தானே என்றபோது அனைவருக்கும் ஒரே விதத்தில் ஆன பணி பயிர்வுகள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றோம்.
மேலும் விற்பனையாளர்களுக்கு ஒரு சீருடை மேற்பார்வையாளர்களுக்கு ஒரு சீருடை என பணியாளர்களை வேறுபடுத்தி பார்ப்பது எங்களுக்கு வேதனையாக இருக்கின்றது. டாஸ்மாக் பணியாளர் என்றாலே அனைவருக்கும் ஒரே சீருடை என்பதுதான் ஏற்புடையதாக இருக்கும். ஆக சம்பளத்தில் எப்படி ஊதிய உயர்வு சமமாக வழங்கப்பட்டதோ அதேபோல் சீருடைகளிலும் அனைவருக்கும் ஒரே கலரான சீருடை அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட மேலாளர் வசம் வைத்தனர்.
இதனைப் பெற்றுக் கொண்ட மண்டல மேலாளர் இதற்கு தீர்வு கண்டிப்பாக காணப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார் என்று விற்பனையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின்போது விற்பனையாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணிகண்டன், பழனிவேல், அரசு பணியாளர் சங்கத்தைச் சார்ந்த முருகானந்தம், சுப்பிரமணி, ஒருங்கிணைந்த விற்படையார் சங்கத்தைச் சார்ந்த ராஜமாணிக்கம், விசிக சங்கத்தைச் சார்ந்த காளியப்பன், ஏஐடிசி சங்கத்தைச் சார்ந்த சேவியர், அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்த அன்புச் செழியன் மற்றும் திருச்சி மாவட்ட விற்பனையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாவட்ட மண்டல மேலாளரை சந்தித்து முறையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0