திருச்சியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: கஞ்சி காய்த்து, காதில் பூ சுற்றி நூதன போராட்டம்; ஒடுக்க நினைக்கும் அரசு 

Sep 18, 2026 - 11:18
 0  22
திருச்சியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: கஞ்சி காய்த்து, காதில் பூ சுற்றி நூதன போராட்டம்; ஒடுக்க நினைக்கும் அரசு 

திருச்சியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: கஞ்சி காய்த்து, காதில் பூ சுற்றி நூதன போராட்டம்; ஒடுக்க நினைக்கும் அரசு 

தமிழகத்தில் விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, திருச்சி சமயபுரம் பள்ளிவிடை அருகே 50க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று 4-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பி வருகின்றனர். கடந்த சில தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நேற்று வாயில் பச்சை துண்டுகட்டியும் இன்று காதில் பூ சுற்றியும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வறுமையின் காரணமாக கடனாளிகளாக மாறியுள்ள விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி, கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

இதனால், விவசாயிகள் அங்கேயே சமைப்பதற்காக வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை காவல்துறையினர் பலவந்தமாக பறிமுதல் செய்தனர்.  காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு விவசாய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

காவல்துறையின் அடக்குமுறைக்கும், தவெக அரசின் செயல்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் தங்களது வாயில் பச்சை துண்டை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தவெக அரசு விவசாயிகளின் ஜனநாயக ரீதியிலான பேச்சுரிமையை முற்றிலும் பறிக்கிறது என்பதை அடையாளப்படுத்தும் விதமாக இந்த வினோதப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அரசு உடனடியாக தலையிட்டு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யும் வரை தங்களது அறப்போராட்டம் ஓயாது என விவசாயிகள் தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருச்சி சமயபுரம் அருகே நான்காவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு விவசாயிகளை ஏமாற்றி விட்டதாக கூறி காதில் பூ சுற்றிக்கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தமிழகம் முழுவதிலிருந்தும் வந்து பங்கேற்றுள்ளனர். நேற்று திருச்சியில் நேற்று இரவு பெய்த பெரு மழையிலும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில், தமிழக அமைச்சர் புஸ்லி ஆனந்த் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவர்கள் 11 பேரை மட்டும் இன்று தலைமைச் செயலத்திற்கு அழைத்து பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக்கு போராட்டக் குழு சார்பில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வக்கீல் ஈசன் முருகசாமி, உழவர் உரிமை இயக்கம் அருள் ஆறுமு கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் அய்யாக்கண்ணு, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட் டமைப்பு பாலு, தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் பாக்கியநாதன், இளம் விவசாயிகள் சங்கம் சவுந்தர், ஐக்கிய விவசாயிகள் சங்கம் வக்கீல் கோவிந்தன், இயற்கை வேளாண் பேரியக்கம் சிதம்பரம் சுரேஷ்குமார், சர்வதேச சமூக பணியாளர்கள் கவுன்சில் திருச்சி விவேகானந்தன், தமிழ் நாடு காவிரி விவசாயிகள் சங்கம் பழனியப்பன் ஆகியோர் தமிழக அரசுடனான பேச்சுவார்த்தைக்கு சென்னை தலைமை செயலகம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0