விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் - பிஆர் பாண்டியன் நம்பிக்கை

Aug 7, 2026 - 20:06
 0  4
விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் - பிஆர் பாண்டியன் நம்பிக்கை

விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் - பிஆர் பாண்டியன் நம்பிக்கை 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசு கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜினா, செங்கோட்டையன், வெங்கட்ராமன், நிர்மல்குமார்,  ராஜ்மோகன், வினோத் காந்திராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். 25 சங்கங்களை சார்ந்த முன்னணி தலைவர்கள் பிஆர் பாண்டியன், பி அய்யாகண்ணு, ஈசன் முருகசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் மாநில செயலாளர் சாமி நடராஜன், தமிழ்நாடு விவசாய சங்கம் மாநில செயலாளர் பிஎஸ் மாசிலாமணி, கரும்பு விவசாய சங்க தலைவர் ரவிந்திரன் உள்ளிட்ட முன்னணி விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில்

எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து  பிஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தவெக கட்சி  தனது தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் சிறுகுறு விவசாயிகளுக்கு 100% ம்,பெரு விவசாயிகளுக்கு 50%ம்,கடன் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.வட்டி தவணை முடியும் தருவாயில் திரும்பி செலுத்திய விவசாயிகளுக்கும் தள்ளுபடி அறிவிப்பில் பயன்பெற அனுமதிக்க வேண்டும். குடும்ப அட்டைக்கு ஒருவர் என்ற பாகுபாடு கூடாது. ஏற்கனவே கடந்த கால ஆட்சியில் தள்ளுபடி செய்த வழிமுறையை பின்பற்றி தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும்.

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3500 கரும்பு டன் ஒன்றுக்கு ரூ..4500 விலை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் 

காவிரி டெல்டாவிற்கு 100 அடி நிரம்பிய பிறகு மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். சம்பா சாகுபடி குறித்து புதிய தொழில்நுட்பத்தை வழங்க வேண்டும். குறுவையை இழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தெலுங்கானாவை பின்பற்றி சம்பா சாகுபடி ஊக்கப்படுத்த ஊக்க நிதி வழங்க வேண்டும். 

மேகதாட்டு அணை அனைத்து கட்சி கூட்டம் குறித்து முதலமைச்சர் உரிய நேரத்தில் தேவைப்படும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பார். தற்போது கர்நாடகாவில் கூட்டப்பட்ட கூட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. குறிப்பாக 13-ஆம் தேதி அவர்கள் முழு அடைப்பு போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது. 

தமிழகத்திற்கு உபரி நீரை திறந்து விடப்பட்டுள்ளது.  மத்திய நிர்வள ஆணையம்  வரைவு திட்ட அறிக்கையை கர்நாடகாவிற்கு திருப்பி அனுப்பி உள்ளது. இந்நிலையில் தற்போது அனைத்து கட்சி கூட்டம் கூட்டி எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது. சட்டத்திற்கு உட்பட்டுதான் இரு மாநிலங்களும் செயல்பட வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட தமிழக முதலமைச்சரோடு பேச்சுவார்த்தை நடத்த கேரள முதலமைச்சர் சதீசன் அழைப்பு விடுத்துள்ளதை நிராகரிக்க வேண்டும். ஏற்கனவே இரு மாநிலங்களுக்கும் நடந்த பேச்சுவார்த்தை முல்லைப் பெரியாரை தவிர்த்து விட்டுதான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் அவர் தவறான வகையில் முல்லைப் பெரியாறுக்காக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனை தமிழக முதலமைச்சர் ஏற்க கூடாது என வலியுறுத்தி உள்ளோம் என்றார்.

இக்கூட்டத்தில் நிதித்துறை செயலாளர் சித்திக், கூட்டுறவு துறை செயலாளர். அமுதா, வேளாண் துறை செயலாளர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே மாரிமுத்து செய்திருந்தார். தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0