திருச்சியில் ரூ.2000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது
திருச்சியில் ரூ. 2000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது
பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய இராசாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் நந்தகுமார் கைது செய்யப்பட்டார் இது குறித்த விபரம் வருமாறு ; திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, இராசாம்பாளையத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவர் தனது கிராமத்தில் தனது தாத்தா பெயரில் உள்ள நிலத்தை பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். அதன்பேரில் மணிவேல் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, இராசாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் நந்தகுமார் என்பவரை கடந்த 05.08.2026 ஆம் தேதி சந்தித்து மனு தொடர்பாக கேட்டபோது பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.3000/- லஞ்சமாக கேட்டு, பின்னர் அவ்வளவு இன்னாள் இயலாது என்று கூறிய மணிவேலில் வேண்டுகோளுக்கு இணங்க லஞ்சத்தை ரூ.2,000/- ஆக குறைத்துள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிவேல், அதுதொடர்பாக இன்று 07.08.2026 திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், காவல் ஆய்வாளர் சேவியார் ராணி மற்றும் போலீசார் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின்போது புகார்தாரர் மணிவேலிடமிருந்து லஞ்சப்பணம் ரூ.2000/-த்தை இராசாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் நந்தகுமார் பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டார். இது தொடர்பாக இராசாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் விஏஓ ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் தீயாய் பரவியதை அடுத்து ஒட்டுமொத்த விஏஓக்களும் அச்சத்தில் இருக்கின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0