பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி; அரசு பள்ளி மாணவிகள் சாதனை

Aug 6, 2026 - 17:15
 0  52
பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி; அரசு பள்ளி மாணவிகள் சாதனை

பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி; அரசு பள்ளி மாணவிகள் சாதனை

திருச்சி திருவெறும்பூர், வட்டார அளவில் அனைத்து பள்ளிகளுக்கு இடையே அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. தடகள போட்டியில் பாப்பா குறிச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல்ல பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 15-க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்று, பள்ளிக்குப் பெருமை தேடித் தந்தனர்.

 தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா, பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்துல்ஜாபர் தலைமையில் உதவி தலைமை ஆசிரியர் பியூலா ஆகியோர் முன்னிலையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. 

விழாவில் ஆசிரியர் சங்கச் செயலாளர் ஆறுமுகம், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் எஸ்.எஸ். ரஹமத்துல்லா, உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வி, ஹெலன் லோகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அத்லெட்டிக் பயிற்சியாளர்கள் அருள்ஜோதி நிவாஸ், ராஜசேகரன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0