தமிழக அரசின் பட்ஜெட்டில் ரூ.9264 கோடி நீர்பாசனத்திற்கு ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது- பிஆர்.பாண்டியன்

Aug 5, 2026 - 16:27
 0  45
தமிழக அரசின் பட்ஜெட்டில் ரூ.9264 கோடி நீர்பாசனத்திற்கு ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது- பிஆர்.பாண்டியன்

தமிழக அரசின் பட்ஜெட்டில் ரூ.9264 கோடி நீர்பாசனத்திற்கு ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது- பிஆர்.பாண்டியன்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் சீர்காழியில் தமிழக பட்ஜெட் குறித்து மாவட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது;

தமிழ்நாட்டில் நீர் பாசனத்துறை கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடின்றி புறக்கணிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் புதிய ஆட்சி முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் அமைந்து, முதல் பட்ஜெட்டிலேயே நீர் பாசனத்துறைக்கு ரூ.9264 கோடி ஒதுக்கீடு செய்து நீர் பாசனத்தையும், நீர் மேலாண்மையையும் மேம்பாடு செய்ய முயற்சி எடுத்துள்ளது பாராட்டுக்குரியது, வரவேற்கத்தக்கதது.

கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு பால்வளத்தை பெருக்க ரூ.10,000 ம் கோடி, ஆடுவளர்க்க ரூ.110 கோடி, காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூ.150 கோடி, அலையாத்தி காடுகள் வளர்ப்பதற்கு ரூ.1762 கோடி, உணவு மற்றும் நுகர்வோர் மானியமாக ரூ.14,830 கோடி, நதிநீர் பாதுகாப்பு ஆய்விற்காக 25 கோடி எல்நினோவை சமாளிக்க ரூ.340 கோடி,பேரிடர் மேலாண்மை திட்டத்திற்கு ரூ.11,532 கோடி, வேளாண்மைக்கான மின் மானியம் ரூ.7332 கோடி, உணவு திருவிழா நடத்த 20 கோடி, காவிரி வைகை தாமிரபரணி ஆறுகளில் சுற்றுலா தளம் அமைக்க ரூ.53 கோடி, பனை மேம்பாட்டு வாரியம் மற்றும் பதநீர் பதப்படுத்தி விற்பனை செய்வதற்கு ரூ.16 கோடி, மனிதர்கள் விலங்குகள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கு 20 கோடி, காவிரி கோதாவரி இணைப்பிற்கு ரூ.200 கோடி, காவிரி கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்ட ஆய்வுக்காக ரூ.10கோடி என நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தொலைநோக்கு பார்வையோடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

நாளைய தினம் வேளாண் பட்ஜெட் வரவுள்ள நிலையில் விவசாயிகள் கடன் தள்ளுபடி தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் சிறு குறு விவசாயிகளுக்கு 100% ம் பெரு விவசாயிகளுக்கு 50%ம் நிபந்தனையின்றி அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்து காத்துள்ளோம். 

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3500 ம் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 ம் விலை நிர்ணய அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இடம் பெறும் என்கிற எதிர்பார்ப்போடு விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

சந்தை உத்திரவாதம் உள்ளிட்ட வேளாண் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான அடிப்படை நோக்கோடு நாளை பட்ஜெட் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

இந்த சந்திப்பின்போது தஞ்சை மண்டல செயலாளர் வேட்டங்குடி சீனிவாசன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட துணைச் செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட கவுரவத் தலைவர் நடராஜன், உயர் மட்ட குழு உறுப்பினர்கள் பாலதண்டாயுதம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0