உதயநிதியை இன்றே விடுவிக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

Aug 4, 2026 - 14:36
 0  93
உதயநிதியை இன்றே விடுவிக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

உதயநிதியை இன்றே விடுவிக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு 

காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சர்ச்சையாக பேசியதாக தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று காலை சென்னை நீலாங்கரை இல்லத்தில் உதயநிதி கைது செய்யப்பட்டு தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தஞ்சாவூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டம் நாளை நடைபெறவுள்ளதால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதால் உதயநிதியை கலந்துகொள்ளவிடாமல் செய்யவே தவெகவினர் இவ்வாறு செய்வதாக உதயநிதி தரப்பு வழக்கறிஞர், நீதிபதியிடம் கூறினார்.

 வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், கைது செய்யப்பட்ட எதிர் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அரசு தரப்பில் நீதிபதியிடம் வாதிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை. விசாரணைக்காகவே அவரை அழைத்துச் செல்கிறார்கள். விசாரணையை முடித்துக் கொண்டு உடனே அவரை விடுவித்து விடுவர் என நீதிபதியிடம் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

 இதையடுத்து விழுப்புரம் ஒலக்கூர் காவல் நிலையத்தில் இருந்து உதயநிதி திண்டிவனம் வழியாக தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இன்று மாலை தஞ்சை காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணையை முடித்துக் கொண்டு அவர் விடுவிக்கப்படுவார். அதன் பின்னர் அங்கிருந்து அவர் கார் மூலமோ அல்லது திருச்சி வந்து விமானம் மூலமோ சென்னை வர ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0