ஆடி 18; திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூ, பழங்களின் விலை உயர்வு
ஆடி 18; திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூ, பழங்களின் விலை உயர்வு
ஆடி 18 விழாவை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்தது. மல்லிகை பூ ரூ.500 லிருந்து ரூ.600,முல்லைபூ ரூ.400 லிருந்து ரூ.500, ரோஜா பூ ரூ.200 லிருந்து ரூ.250, விச்சு பூ ரூ.120 லிருந்து ரூ.160, சம்மங்கி ரூ.200 லிருந்து 300, ஜாதிப்பூ ரூ.400 லிருந்து ரூ. 600, செவ்வந்தி 200 லிருந்து 250க்கும் விற்கப்படுகிறது. இதேபோன்று திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைப்பழம், கொய்யாப்பழம், திராட்சை, ஆரஞ்சு, மாதுளம், சாத்துக்குடி உள்ளிட்ட பல பழங்களின் விலை இரு மடங்காக உயர்ந்தது.
மேலும் ஆடி 18க்கு சாமி கும்பிட படையல் போட பயன்படுத்தும் வாழை அரிசி விலையும் உயர்த்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் நாளை ஆடிப்பெருக்கு என்பதால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0