எல்.நினோ தாக்குதல்; திருவாரூரில் திரண்ட விவசாயிகள்;மேகதாட்டு நடுவர் மன்றம் கைவிடுக உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்
எல்.நினோ தாக்குதல்; திருவாரூரில் திரண்ட விவசாயிகள்;மேகதாட்டு நடுவர் மன்றம் கைவிடுக உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்
எல்.நினோ தாக்குதல் காரணமாக காவிரி வறண்டதால் குருவை இழந்தோம், சம்பாவும் கேள்விகுறியான நிலையில் வேளாண்மை, உழவர், உணவு பாதுகாப்பு குறித்த மாநாடு திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.,
வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கே. சுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசினார். நிகழ்வில் எஸ். காமராஜ் எம்எல்ஏ, ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் முனைவர் இரா. தமிழ்வேந்தன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.
முன்னால் இயக்குனர் புயல் ஆராய்ச்சி மையம் எஸ் ஆர் ரமணன், கோவை வேளாண்பல்கலைக்கழக முன்னால் துணைவேந்தர் பத்மஸ்ரீ இராமசாமி, மூலிகை கால்நடை ஆராய்ச்சியாளர் பத்மஸ்ரீ புண்ணியமூர்த்தி, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி முத்தமிழ்செல்வன், இயற்கை மருத்துவம் மற்றும் உணவு ஆராய்ச்சியாளர் கோ.சித்தர், தஞ்சை தேசிய உணவு தொழில் நுட்ப இயக்குநர் வி.பழனிமுத்து, வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன், ஸ்கைவின் மோகன் உள்ளிட்டோர் எல்நினோ தாக்குதலை எதிர்கொண்டு வேளாண் உற்பத்தி பெருக்கம், உழவர் உணவு பாதுகாப்பு குறித்து விளக்க உரையாற்றினர்.
மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் வரவேற்புரையாற்றினார், மாநிலத் தலைவர் திருப்பதி, துணைத் தலைவர் கிருஷ்ண மணி, துணைச் செயலாளர் சுவாமிநாதன், திருவாரூர் மாவட்ட தலைவர் சுப்பையன், மாவட்ட செயலாளர் சரவணன், நாகை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் வேதை கருணைநாதன், தஞ்சை மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் பிரபாகரன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பத்மநாபன், கடலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், தலைவர் அன்பழகன் உள்ளிட்ட 1500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தென்மண்டல தலைவர் கட்டிக்குளம் மாணிக்கவாசகம், கவுரவதலைவர் எம்பி இராமன், முல்லை பெரியாறு வைகை பாசண விவசாயிகள் சங்க தலைவர் ஆதிமூலம், மாநில இளைஞரணி தலைவர் மேலூர் அருண், செயலாளர் மகேஸ்வரன், மதுரை மண்டல தலைவர் மதுரை வீரன், செயலாளர் உறங்காபுலி, நெல்லை மண்டல தலைவர் செல்லதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
எல் நினோ வறட்சி பாதிப்பிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு ;
1. எல் நினோ உயர் மட்டக்குழு அமைத்த தமிழக அரசுக்கு நன்றி. காவிரி டெல்டா மற்றும் தமிழகம் முழுமையும் வறண்டு கிடக்கிறது. தமிழகத்தில் எல் நினோ தாக்குதலால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்ய உயர்மட்ட ஆய்வுக்குழு அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதனை ஏற்று தமிழக முதலமைச்சர் உயர்மட்ட ஆய்வு குழு அமைத்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து அக்குழு தமிழகம் முழுமையிலும் பயணம் செய்து கடும் வறட்சியில் இருந்து விவசாயிகளையும் பொதுமக்களையும் பாதுகாப்பதற்கு அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
2. கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்திடுக, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100%ம், பெரு விவசாயிகளுக்கு 50% ம் கூட்டுறவு வேளாண்மை கடன் முழுமையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்திடுக... நிபந்தனையின்றி புதிய கடன் அறிவிப்பு வெளிவரும் வரை கடன் வசூல் நடவடிக்கையை தடுத்து நிறுத்திடுக.
3. கூட்டுறவு அரசாணைகளை திரும்பப்பெற்றிடுக.. கூட்டுறவுத்துறை கடன் தள்ளுபடி குறித்து வெளியிட்ட அரசாணையையும், சுற்றிக்கையையும் திரும்பப்பெற்றிடுக.
4. வறட்சி நிவாரணம் வழங்கிடுக. காவிரி டெல்டாவில் குறுவையை இழந்த விவசாயிகளுக்கு ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள் வறட்சி நிவாரணம் வழங்கியதை பின்பற்றி ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15,000/- வழங்கிடுக.
5. சம்பாவிற்கு ஊக்க நிதி வழங்கிடுக. சம்பா சாகுபடியை ஊக்கப்படுத்த ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 20,000/-ம் ஊக்க நிதியாக வழங்கிடுக.
6. டீசல் மாண்யம் வழங்கிடுக. கோடை உழவு மேற்கொள்ள வாடகையின்றி டிராக்டர் மற்றும் டீசல் மாண்யம் வழங்கிடுக.
7. மேகதாட்டு அணை தடுத்திடுக. கர்நாடக அரசு சட்ட விரோதமாக மேகதாட்டு அணை கட்ட எடுக்கும் நடவடிக்கையை சட்டப்படி தடுத்து நிறுத்திடுக...
8. சம்பாவிற்கு தண்ணீர் பெற்றிடுக. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்திரவின் அடிப்படையில் கர்நாடகவிடமிருந்து சம்பாவிற்கு சாகுபடிக்கு உரிய தண்ணீரை பெற்று வழங்கிட வலியுறுத்துகிறோம்.
9. மேகதாட்டு நடுவர் மன்றம் கைவிடுக. மேகதாட்டிற்கு நடுவர் மன்றம் கோருவதை திராவிட முன்னேற்ற கழகம் கைவிட வலியுறுத்துகிறோம்...
10.100 நாள் வேலைத்திட்டத்தை உறுதி படுத்திடுக. விவசாய தொழிலாளர்கள் வேலை இழந்து பரிதவிக்கிறார்கள். 100 நாள் வேலைத்திட்டத்தில் தேவையான அளவிற்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்திட வலியுறுத்துகிறோம்.
11. குடும்ப அட்டைக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கிடுக. வேலைவாய்ப்பை இழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு குடும்ப அட்டைக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டுகிறோம்.
12. அணைகள், ஏரி, குளம், குட்டைகள் தூர் வாரிடுக...தமிழகம் முழுமையிலும் அணைகள், ஏரி, குளம், குட்டைகள் வறண்டு கிடக்கிறது. அதனை தூர்வாரி மழைநீர் சேமிப்பை உறுதிப்படுத்திட தமிழக அரசு மத்திய அரசின் பேரிடர் கால நிதி உதவி பெற்று வறட்சி சிறப்பு திட்டமாக நிறைவேற்றிட வலியுறுத்துகிறோம்.
13. பாசன, வடிகால்களை தூர் வாரிடுக, காவிரி டெல்டாவில் பாசனம் மற்றும் வடிகால் ஆறுகளை தூர் வாரிட முன்வர வேண்டும் மேலும் காவிரி டெல்டா கடல் முகத்துவார நதிகள் சீரமைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
14. குறுவையை இழந்த விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கிடுக. குறுவையை இழந்த விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அரசிதழில் 100% வறட்சி அறிவிப்பை வெளியிட்டு, காப்பீட்டிற்கான முழு இழப்பீட்டுத் தொகையை பெற்று தருக...
மேற்கண்ட தீர்மானங்கள் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றிட உரிய நிதி ஒதுக்கீடுகள் செய்து தமிழக விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதுகாத்திட வேண்டுகிறோம்.
மேற்கண்டவாறு இன்று நடைபெற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0