மேகதாட்டு அணை கட்டுமானத்தில் காங்கிரஸ், பிஜேபி கூட்டு சதி; 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பறிபோகும் - பி.ஆர்.பாண்டியன்
மேகதாட்டு அணை கட்டுமானத்தில் காங்கிரஸ், பிஜேபி கூட்டு சதி; 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பறிபோகும் - பி.ஆர்.பாண்டியன்
கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது;
கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்று இருக்கிற காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் நேரடி கட்டுப்பாட்டில் காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுகிறது. கடந்த 2021ல் அன்றைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வரைவு திட்ட அறிக்கையை தயார் செய்து 9ஆயிரம் கோடி பட்ஜெட் கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து மத்திய நீர் வள ஆணையத்திடம் வரைவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதனை பெற்றுக் கொண்ட நீர்வள ஆணைய தலைவர் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது குறித்து மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடுங்கள் என்று கூறி வரைவு திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் 2022-ல் காவிரி மேலாண்மை ஆணையம் வரைவு திட்ட அறிக்கையை விவாதிக்க அனுமதி மறுத்து திருப்பி அனுப்பியது. இந்த சூழலில் நேற்று பாராளுமன்றத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன்சவுத்ரி உச்சநீதிமன்ற தீர்ப்பு அட்டவனை 18 ன்படி மேகதாட்டில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என பதிலளித்துள்ளார்.
2015ல் இதே கேள்விக்கு அன்றைய ஜனசக்தி துறை அமைச்சர் உமாபாரதி அட்டவனை 13-ல் குறிப்பிட்டபடி தமிழகத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என பதில் அளித்துள்ளார்.
எனவே, ராஜ்பூஷன்சவுத்ரி போன்றவர்களுடைய பதிலால் பாராளுமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது.
மாநிலங்களவையில் பதிலளித்த சிறிது நேரத்தில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜின கார்கேயை சந்தித்து மேகதாட்டு குறித்து விவாதிக்கிறார்.
அடுத்த சில மணி நேரங்களில் கர்நாடகாவை சேர்ந்த அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினுடைய முன்னணி தலைவர் ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற
மேகதாட்டு குறித்த ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார்.
இதன் மூலம் காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் கூட்டு சேர்ந்து தமிழகத்தை அழிப்பதற்காக மேகதாட்டு அணை கட்ட கூட்டு சதியில் ஈடுபடுவது வெளிப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதற்கு எதிராக
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக அனைத்துக் கட்சி விவசாயிகள் கொண்ட கூட்டத்தைக் கூட்டி தொடர் நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும். மேகதாட்டு அணை
கட்டப்பட்டால் சென்னை
உட்பட 11 மாநகராட்சிகளை உள்ளடக்கி 32 மாவட்டங்களில் வாழக்கூடிய 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பறிபோகும்.
சுமார் 25 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாகும். விவசாயிகளும் தொழிலாளர்களும் அகதிகளாக வெளியேறக்கூடிய பேராபத்து ஏற்படும்என்பதை உணர்ந்து முதலமைச்சர் அவசரகாலமாக செயல்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள், வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றுபடுத்தி தீவிரமான போராட்டத்தில் களமிறங்க நேரிடும் என எச்சரிக்கிறேன் என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கடலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உடன் இருந்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0