ரயில்வே தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் 

Jul 20, 2026 - 16:53
 0  39
ரயில்வே தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் 

ரயில்வே தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் 

எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்க ஊழியர்களைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி, டி.ஆர்.இ.யு சங்கத்தின் பொதுச் செயலாளர் பேபி ஷகிலாவைக் கண்டித்து, பொன்மலை ஆர்மரி கேட் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, எஸ்.ஆர்.எம்.யூ அமைப்பின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார்.

எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்க ஊழியர்களை அவதூறாகப் பேசிய டி.ஆர்.இ.யு பொதுச்செயலாளர் பேபி ஷகிலாவின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அவர் தனது பேச்சுக்காகத் தொழிலாளர்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், எஸ்.ஆர்.எம்.யூ. அமைப்பைச் சேர்ந்த ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு, சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராகத் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0