வியட்நாம் படகு விபத்தில் பலியானோர் உடல்களுக்கு துணை சபாநாயகர், திருச்சி எம்பி, முன்னாள் அமைச்சர் கே. என்.நேரு மரியாதை
வியட்நாம் படகு விபத்தில் பலியானோர் உடல்களுக்கு துணை சபாநாயகர், திருச்சி எம்பி, முன்னாள் அமைச்சர் கே. என்.நேரு மரியாதை
வியட்நாம் தீவு பகுதியில் படகு விபத்தில் சிக்கி உயிரிழந்த திருச்சியை சேர்ந்த 3 நபர்களின் உடல்களை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப் பட்டது. உடல்களுக்கு சட்டபேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வியட்நாம் நாட்டின் பூகுவோக் தீவுக்கு அருகே ஜூலை 11ம் தேதியன்று கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். செல்போன் நிறுவனம் தனது விநியோகஸ்தர்களை சிறப்பு சுற்றுலா அழைத்துச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது.
மேலும் உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரும், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேர்கள், கேரளத்தைச் சேர்ந்த 2 பேர்கள் அடங்குவர். படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15 இந்திய சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் நேற்று விமானம் மூலம் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து உடல்கள் இன்று சென்னை, கோவை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
சென்னை விமானநிலையத்தில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர்களிம் உடல்கள் இன்று காலை சென்னை கொண்டு வரப்பட்டது. பின்பு உயிரிழந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், உடல்கள் அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோன்று திருச்சியைச் சேர்ந்த மூவரின் உடல்களையும் திருச்சி மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் கோவை விமானநிலையத்தில் அஞ்சலி செலுத்தி பெற்றுக்கொண்டனர். பின்னர் கோவை விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அன்பு நகரை சேர்ந்த அழகுராஜன், ஸ்ரீரங்கம் கொண்டயம்பேட்டை பகுதியை சேர்ந்த பாலாஜி, பீமநகர் பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா ஆகிய 3 நபர்களின் உடல்கள் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அவரவர் குடும்பத்தினரிடம் இன்று மாலை பாதுகாப்புடன் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்களை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் கதறி அழும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் திருச்சி எம்பி துரை வைகோ, முன்னாள் அமைச்சரும் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் உயிரிழந்த அழகுராஜன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் எடமலைப்பட்டி புதூர் அன்பு நகரில் வசித்த அழகுராஜன் சொந்த ஊர் மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கிராமம் என்பதால், சொந்த கிராமத்துக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
முன்னதாக, வியட்நாம் விபத்தில் பலியான திருச்சி கிராப்பட்டி அருணாசலம் நகரைச் சோ்ந்த சிவசாமி மகனும், லாவா கைப்பேசி நிறுவனத்தின் திருச்சி, கரூா், புதுக்கோட்டை விற்பனை மேலாளருமான அழகுராஜன்க்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனா்.
இதேபோல, திருவானைக்காவல் கீழகொண்டயம்பேட்டை மேலத்தெரு நடேசன் மகனும், அரியமங்கலம் பகுதி செல்மோா் கைப்பேசி மொத்த விற்பனை நிலைய மேலாளா் பாலாஜிக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனா்.
திருச்சி பீமநகா் கண்டி தெருவைச் சோ்ந்தவரும், அப்துல் மஜீத் மகனுமான ஷேக் அப்துல்லா என்பவா் திருச்சி லண்டன் ஹாா்டுவோ்ஸ் பங்குதாரராகவும், கைப்பேசி விற்பனை நிறுவன உரிமையாளராகவும் இருந்தாா். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0