வியட்நாம் படகு விபத்து; திருச்சியைச் சேர்ந்த 3 பேர் உள்பட 15 இந்தியர்கள்  பலி

Jul 11, 2026 - 17:59
Jul 11, 2026 - 21:16
 0  405
வியட்நாம் படகு விபத்து; திருச்சியைச் சேர்ந்த 3 பேர் உள்பட 15 இந்தியர்கள்  பலி

வியட்நாம் படகு விபத்து; திருச்சியைச் சேர்ந்த 3 பேர் உள்பட 15 இந்தியர்கள்  பலி

வியட்நாம் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பூ குவாக் தீவு அருகே, 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் சென்ற படகு திடீரென கடலில் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சிக்கியவர்களில் 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், தமிழர்கள் உட்பட குறைந்தது 15 இந்தியர்கள் பலியாகி இருக்கின்றனர்.

இந்த விபத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ஒருவரும் எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த இருவரும் என மூன்று நபர்கள் பலியாகி இருக்கின்றனர். இதேபோல் பழனியைச் சேர்ந்த ஒருவரும் பலியாகி இருக்கின்றார். மேலும், காணாமல் போன மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இதையடுத்து வியட்நாம் படகில் சென்ற 32 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் தமிழர்களின் பெயர்கள் அதிகமாக இருக்கின்றன.

விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களில் 10 பேர் தமிழர்கள் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஒருவர் இறந்ததாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அதுபற்றிய விவரங்களை விரைவில் அறிவிப்பதாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘பல இந்திய சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு ஒன்று, வியட்நாமின் பு குவோக் தீவு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளான துயர சம்பவம் நடந்துள்ளது.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சம்பவம் குறித்த துல்லிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தகவல்களையும உதவிகளையும் வழங்க இந்திய தூதரகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை, +84 36 281 7930, +84 91 552 37 14 and +84 33 452 0414 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

ஹனேயிலும ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை +84 91 308 9165 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எந்தவொரு உதவிக்கும் அல்லது சந்தேகங்களுக்கும் உதவ நாங்கள் தயாராக உள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த படகு விபத்தில் திருச்சியைச் சேர்ந்த மூன்று பேர் பழனியைச் சேர்ந்த ஒருவர் தர்மபுரியைச் சேர்ந்த ஒருவர் என தமிழர்கள் எட்டு பேர் பலியாகி உள்ளனர். 

வியட்நாமில் நடைபெற்ற விபத்தில் திருவானைக்காவல் கீழக்கொண்டயம்பேட்டையை சேர்ந்த நடேசன் மகன் பாலாஜி(40) என்பவரும், திருச்சி லண்டன் ஹார்டுவேர்ஸ் நிறுவன பங்குதாரர் ஷேக், எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த அழகுராஜ் மற்றும் பழனியைச் சேர்ந்த பிரபு, வேலூரைச் சேர்ந்த வினய்குமார்  தர்மபுரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 10 தமிழர்கள் பலியாகி இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களின் பட்டியல் இதோ ;

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 2
Wow Wow 0