திருச்சியில் முதல்வர்: டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் டி.எம். அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
திருச்சியில் முதல்வர்: டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் டி.எம். அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி குடியேறும் போராட்டம் துவாக்குடி டாஸ்மாக் மண்டல அலுவலக வாசலில் இன்று நடைபெற்றது.
அரசு டாஸ்மார்க் நிறுவனத்தில் 23 ஆண்டுகாலக தற்காலிகமாக பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த கால ஆட்சிகளில் டாஸ்மாக் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கிடைத்த பதில் தான் தற்போதைய ஆட்சியிலும் தொடர்கின்றது.
இதுவரை டாஸ்மாக் பணியாளர்கள் மிகப்பெரிய போராட்டத்தை திட்டமிடும் பொழுதெல்லாம், போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் வழிமுறைகளை தான் தற்போதைய புதிய அரசும் மேற்கொள்கின்றது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் ஊதிய உயர்வு அறிவிப்பு அந்த வகையினை சேர்ந்ததுதான். எங்களது முதன்மை கோரிக்கையான பணி நிரந்தரம் செய்வது குறித்து எந்த ஒரு உறுதியான வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என்பதால்தான் இந்த போராட்டத்தை நடத்துகின்றோம்.
தமிழக முதல்வர் மற்றும் துறை அமைச்சரிடம் இருந்து உண்மையான சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றோம், 23 ஆண்டுகால எங்களது டாஸ்மாக் நிறுவன உழைப்பை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் எங்களது கோரிக்கைகள் சட்டப்படியானது ஆகும்.
அந்த சட்டப்படியான உரிமைகளை வழங்குவதற்கு நெடிய கால அவகாசம் எதற்கு.?? அண்டை மாநிலமான கேரளாவில் மதுபான விற்பனை பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படும் பொழுது தமிழ்நாட்டில் ஏன் சாத்தியம் ஆகாது.
மேலும் ஐந்தாண்டு அரசு துறையில் தற்காலிக பணிபுரியும் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தங்களது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
மேலும், எங்களது குழந்தைகளின் கல்வி கனவு, தாய் தந்தையரின் மருத்துவ செலவு, வீட்டு வாடகை ஆகியவற்றை நிறைவேற்ற நிரந்தரமற்ற டாஸ்மாக் பணியின் குறைந்த ஊதியத்தை கொண்டு இயலாது, எனவே நாங்கள் பணி புரியும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் இன்று குடியேறுகிறோம்.
முதல்வர் எங்களது பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலிறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மதுபான மாவட்ட அலுவல கங்களில் இந்த குடியேறும் போராட்டம் நடைப்பெறுகிறது அதன் ஒரு பகுதியாக திருச்சியில் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் அரசு மதுபான கிடங்கின் முன்பு திருச்சி மாவட்ட அரசு டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் குடியேறும் போராட்டத்தை திருச்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில், மாவட்ட தலைவர் பழனிவேல் முன்னிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று குடியேறும் போராட்டத்தை நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் முருகானந்தம், எஸ்சி எஸ்டி சங்க மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் மாவட்ட செயலாளர் முருகையா மற்றும் பணியாளர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் நெல்சன் மற்றும் திருச்சி மாவட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக தமிழக முதல்வர் விஜய் திருச்சி வந்திருந்த நிலையில் இந்தப் போராட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0