தமிழக முதல்வர் திருச்சி வழியாக கரூர் சென்றடைந்தார் ; வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு
தமிழக முதல்வர் திருச்சி வழியாக கரூர் சென்றடைந்தார் ; வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு காலை 10.15 மணிக்கு வந்தடைந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர், தமிழக வெற்றி கழக முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த தமிழக முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் சென்றார். வழிநெடுகிலும் அவரை வரவேற்றுச் சாலையின் இருபுறமும் தவெக (TVK) கொடிகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள திருச்சி - புதுக்கோட்டை, திருச்சி - சென்னை மற்றும் திருச்சி - கரூர் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
திருச்சி மாநகரில் முதல்வரின் பயணத்தடத்தில் சாலையோரம் பாதுகாப்பு மற்றும் பார்வையாளர் வசதிக்காக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
புதுக்கோட்டை சாலை, சென்னை பைபாஸ் சாலை, சஞ்சீவி நகர், குடமுருட்டி பாலம் மற்றும் கரூர் சாலை உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முதல்வர் விஜய்யை பொதுமக்கள் பார்க்க திருச்சி விமான நிலையம் எதிர்ப்புறம், ஐஜி அலுவலகம் அருகில் உள்ள இடம், சஞ்சீவி நகர், சிந்தாமணி அண்ணாசிலை ஆகிய 4 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விமான நிலையத்திலிருந்து பத்து முப்பது மணிக்கு புறப்பட்ட தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதல்வருமான விஜய் 11 :30க்கு கரூர் மாவட்ட எல்லையை சென்றடைந்தார்.
திருச்சியில் இருந்து கரூர் செல்லும் வழிகளில் ஆங்காங்கே பொதுமக்கள் இளைஞர்கள் கல்லூரி மாணவிகள் மாணவர்கள் மலர்கள் தூவி ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர்.
முன்னதாக தமிழக முதல்வர் கரூர் வருகையை முன்னிட்டு கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0