சென்னையை குளிர்வித்த திடீர் மழை: சாலைகளில் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் அவதி

Jul 9, 2026 - 20:19
 0  8
சென்னையை குளிர்வித்த திடீர் மழை: சாலைகளில் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னையை குளிர்வித்த திடீர் மழை: சாலைகளில் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னை மாதவரம், பெரம்பூர், ரெட்டேரி, மூலக்கடை, கேளம்பாக்கம், கிளாம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் வெப்பத்தால் அவதியடைந்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென வானில் மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது.

இதனைத் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், பல்வேறு சாலைகளில் ஏற்கனவே உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் மெதுவாக செல்ல வேண்டும் என

சாலை பள்ளங்களை உடனடியாக சீரமைத்து, மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0