பரீட்சை எழுதி வெற்றி பெற்றவன் நான் அல்ல, ஆசிரியர் சொல்வதைக் கேட்டு வெற்றி பெற்றவன்-அமைச்சர் கே.என்.நேரு

Sep 7, 2025 - 20:22
 0  4
பரீட்சை எழுதி வெற்றி பெற்றவன் நான் அல்ல, ஆசிரியர் சொல்வதைக் கேட்டு வெற்றி பெற்றவன்-அமைச்சர் கே.என்.நேரு

பரீட்சை எழுதி வெற்றி பெற்றவன் நான் அல்ல, ஆசிரியர் சொல்வதைக் கேட்டு வெற்றி பெற்றவன்-அமைச்சர் கே.என்.நேரு

திருவெறும்பூர் அருகே காட்டூர் தனியார் பள்ளி வளாகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 10,12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசு அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தமிழ்ப்பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ -மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 38 மாவட்டங்களிலிருந்தும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் மேல்நிலை/உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2982 பேர் மற்றும் தமிழ் பாடத்தில் 100% மதிப்பெண் பெற்ற மாணவ / மாணவிகள் 142 பேர் என மொத்தம் 3124 பேருக்குபாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கு 10 மணி மற்றும் 12ஆம் வகுப்பு 100% தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கும் தமிழ் பாடத்தில் நூறு பாதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசியதாவது;


உயர்கல்விகள் பல சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 25 புதிதாக கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது போன்ற விழாக்கள் ஆசிரியர்களை பாராட்டுவதற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக அமைச்சர் மகேஷ் செய்து வருகிறார். இங்கு இருப்பவர்களில் நான் மட்டும்தான் குறைவாக படித்துள்ளேன், என்னை விட அனைவரும் பட்டதாரிகள், படித்து, பாடம் பரீட்சை எழுதி வெற்றி பெற்றவன் நான் அல்ல, ஆசிரியர் சொல்வதைக் கேட்டு வெற்றி பெற்றவன். மருத்துவமனைகள் அதிகம் இருந்தாலும் அரசு மருத்துவமனையில் தான் அதிக மருத்துவர்கள் உள்ளனர். அதேபோல் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அதிகம் இருந்தாலும், அரசு பள்ளியில் தான் அதிகமாக மாணவர்கள் மதிப்பெண் பெறுகின்றனர். உங்களை பாராட்டுவது தகும் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவது எளிதல்ல, மேல்நிலைப் பள்ளியில் 134 பேர் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். உயர்கல்விகள் 8 பேர் பெற்றுள்ளனர்.
இது போன்ற விழாக்கள் நடத்துவதற்கு அரசு சார்பில் பெரிய அரங்கம் கட்ட வேண்டும். திருச்சி கலைஞர் பேருந்து முனையம் அருகே 10 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கேயே அரசு தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கும், அங்கு கூட்டம் நடத்துவதற்கு இது போன்ற அரங்கங்கள் அமைப்பதற்கும் இடம் உள்ளது. அடுத்தமுறை அமைச்சராகி வரும் பொழுது நீங்கள் கூட்டத்தை நடத்தலாம், இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே நம்பர் ஒன் பள்ளிக் கல்வித்துறையாக நமது பள்ளிக்கல்வித்துறை உள்ளதாக தமிழக முதல்வர் பாராட்டியுள்ளார், நானும் பாராட்டிருக்கிறேன் என்றார்.
இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை சேர்ந்த அலுவலர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வரவேற்றார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா நன்றி கூறினார்.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0