நிலுவைத் தொகை வழங்க லஞ்சம்; மாவட்ட கல்வி அதிகாரி கைது
நிலுவைத் தொகை வழங்க லஞ்சம்; மாவட்ட கல்வி அதிகாரி கைது
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் புகழேந்தி. இவர், முசிறி அருகே உள்ள தண்டலைபுத்தூர் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், திருச்சி மாவட்ட கல்வி அலுவலராகவும் (பொ) பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக தேவி என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவரது வருடாந்திர ஊதிய உயர்வு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றது தொடர்பான நிலுவைத் தொகை பில் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்க கேட்டு, புகழேந்தியை தேவியின் கணவர் இளமுருகு (இவரும் ஆசிரியராக பணியாற்றியவர்) சந்தித்து கோரிக்கை வைத்தபோது வருடாந்திர ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்க ஏற்பாடு செய்ய புகழேந்தி 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று ஆசிரியர் இளமுருகு திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல்,பிரசன்ன வெங்கடேஷ். பாலமுருகும்,சேவியர்ராணி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையில் ரசாயனம் தடவிய ரூ.30ஆயிரத்துடன் ஆசிரியர் இளமுருகு , நேற்று இரவு திருச்சி பழைய கலெக்டர் அலுவலக பகுதியில் உள்ள திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் புகழேந்தி லஞ்சப்பணம் 30,000 ரூபாயை இளமுருகுவிடமிருந்து கேட்டுப் பெற்றபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திலும், புகழேந்தி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0