சட்டமன்றத்தில் கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்- துணை சபாநாயகர் ரவிசங்கர் 

Jun 24, 2026 - 16:06
 0  107
சட்டமன்றத்தில் கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்- துணை சபாநாயகர் ரவிசங்கர் 

சட்டமன்றத்தில் கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்- துணை சபாநாயகர் ரவிசங்கர் 

முதல்வர் பேசும் போது முறையாக சபாநாயகரின் அனுமதி கேட்ட பிறகு தான் சைகை செய்தார். எதிர் புறத்தில் பேசுபவர்கள் ஒரு சிலர் ஒருமையில், கெட்ட வார்த்தையில் பேசினார்கள் என திருச்சியில் துணை சபாநாயகர் ரவிசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இது குறித்த விபரம் வருமாறு ;

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பாலக்கரை பகுதியில் சிறப்பு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவரும், தமிழக வெற்றிக்கழக நிர்வாகியுமான ஆர்.கே.ராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துணை சபாநாயகர் ரவிசங்கர் தெரிவித்ததாவது;

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டபேரவையில் விமர்சனம் வைத்துவிட்டு, டிவி பார்க்க சென்று விட்டார். முதல்வர் பேசும்போது முறையாக சபாநாயகரின் அனுமதி கேட்ட பிறகு தான் அவர் சைகை செய்தார். எதிர் புறத்தில் பேசுபவர்கள் ஒரு சிலர் ஒருமையில், கெட்ட வார்த்தையில் பேசினார்கள், அதை தான் சபாநாயகர் கண்டித்தார். 

சட்டபேரவையில் முதல்வர் பேசியது விமர்சனம் செய்யபடுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அனைவரும் பாராட்டினார்கள். எந்த வகையில் விமர்சனம் வந்தது. 

முதல்வர் நடிகராகவும், சபாநாயகர் இயக்குனராகவும் காணப்பட்டார்கள் என உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்? 

அதை பார்த்து பார்த்து படிச்சாரே, கீழே பார்த்து படிச்சாரே அதை சொல்லுறீங்களா என்றார். 

முதல்வர் பேசும் போதே சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்களே இதை எப்படி பார்கிறீர்கள் என்ற கேள்விக்கு... பதில் அளித்த அவர்.. உங்களை போல தான் நானும் பார்க்கிறேன்.. அவர்களை நம்பி ஓட்டு போட்ட மக்கள் தான் சிந்திக்க வேண்டும் என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 1
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0