முதல்வர் விஜய் பிறந்தநாள் ; புத்தூர் மேற்கு பகுதி சார்பில் அன்னதானம்
முதல்வர் விஜய் பிறந்தநாள் ; புத்தூர் மேற்கு பகுதி சார்பில் அன்னதானம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட தலைவர் செந்தில் மற்றும் மாவட்ட செயலாளர் அம்மையார் சந்திரா, மாவட்ட செயற்குழு டேனியல் தலைமையில் புத்தூர் மேற்கு பகுதி கமல் ஏற்பாட்டில்
ராமலிங்கம் நகர் பகுதியில் உள்ள த ஸ்பாசிடிக்ஸ் சொசைட்டியில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் .புத்தூர் மேற்கு பகுதி செயலாளர் பூக்கடை மணிகண்டன் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் அன்புராஜ் மற்றும் 24B, 23, 24 வட்ட கழக செயலாளர்கள் அப்பு (எ) சுப்ரமணியன், செங்குளதான், வீரமணி, துணை செயலாளர் சந்திரசேகர் முன்னிலையில் மதிய உணவு வழங்கப்பட்டது.
அதேபோல் இன்று இரவு உணவினை மனிதம் தொண்டு நிறுவனத்தில் வசிக்கும் ஆதரவற்ற பெரியோர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0