திருச்சி மாநகராட்சியில் 10,000 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி - மேயர் 

Jun 22, 2026 - 18:39
 0  14
திருச்சி மாநகராட்சியில் 10,000 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி - மேயர் 

திருச்சி மாநகராட்சியில் 10,000 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி - மேயர் 

திருச்சி மாநகராட்சியில் 10,000 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்துகள் செலுத்தும் பணியை மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் மு.அன்பழகன் இன்று தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்சியில் ஆணையர் வீர் பிரதாப்சிங், துணை மேயர் ஜி.திவ்யா, நகர்நல அலுவலர் கார்த்திகேயன், மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மேயர் அன்பழகன் தெரிவித்ததாவது; திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரோபரியாக சுற்றி திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு பணிகள் ஜனவரி-2025ல் மேற்கொள்ளப்பட்டது. 

கணக்கெடுப்பு அறிக்கையில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 20571 தெருநாய்கள் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படாத 23196 தெருநாய்கள் சுற்றி திரிவதாகவும், ஆக மொத்தம் 43,767 தெருநாய்கள் இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிவதாக அறிக்கை பெறப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு அறிக்கை பெறப்பட்ட பிறகு 2025 ஆம் ஆண்டில் 8698 தெரு நாய்களுக்கும், 2026 நடப்பு ஆண்டில் இதுவரை 3054 தெருநாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  மீதமுள்ள 11,444 தெருநாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் நடப்பு ஆண்டில் முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் ,தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்துகள் கடந்த ஆண்டில் 5000 தெருநாய்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 10,000 தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்துகள் செலுத்தும் பணிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று தொடங்கி வைக்கப்பட்டது என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0