ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக எம்எல்ஏ தமிமுன் அன்சாரி முன்னிலையில் தீர்மானம்

Jun 17, 2026 - 14:57
 0  8
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக எம்எல்ஏ தமிமுன் அன்சாரி முன்னிலையில் தீர்மானம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக எம்எல்ஏ தமிமுன் அன்சாரி முன்னிலையில் தீர்மானம்!

கடலூர் பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இயற்கை சூழலை சீர்குலைக்கும் இந்த திட்டத்தை அரசு அனுமதிக்கக் கூடாது என கிளை பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்த விபரம் வருமாறு ;

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட கிள்ளை பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி கலந்து கொண்டார். இதில் பரங்கிப்பேட்டை கிள்ளை கடலோரப் பகுதியில் இந்துஸ்தான் நிறுவனம் சார்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க நான்கு புதிய கிணறுகள் அமைக்க அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் மீன் வளம், கடல் வளம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு கேன்சர் போன்ற நோய் அபாயங்கள் ஏற்பட காரணமாக இருக்கும் என்பதால் எதிர்ப்புகள் அரசியல் கட்சியினர் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் கிள்ளை பேரூராட்சி மன்றத்தில் இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கிள்ளை ரவிந்திரன் உள்ளிட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

முன்னதாக, கடலூர் அருகே புதிதாக நான்கு ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதற்காக கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஹிந்துஸ்தான் நிறுவனம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. அதாவது ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்துள்ளதால், புதிய கிணறுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இதற்காக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்குள் இந்த எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. சுமார் ரூ.425 கோடி மதிப்பீட்டில் நான்கு ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் நிறுவனம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0