ரயிலில் சென்னை போகிறீர்களா!

Sep 7, 2025 - 09:47
 0  2
ரயிலில் சென்னை போகிறீர்களா!

ரயிலில் சென்னை போகிறீர்களா!

சோழன், மலைக்கோட்டை, பாண்டியன் உள்பட 5 விரைவு ரயில்கள் செப்.10 முதல் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்துவரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ஆறு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில், 5 விரைவு ரயில்கள், தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எழும்பூர் - திருச்சி சோழன் (22675), எழும்பூர் - திருச்சி ராக்போர்ட் (12654/ 12653) , எழும்பூர் - மதுரை பாண்டியன் (12638),  எழும்பூர் - ராமேஸ்வரம் சேது(22661/ 22662), எழும்பூர் - ராமேஸ்வரம் போட் மெயில் (16751 / 16752) ஆகிய விரைவு ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது.
அதேபோல, எழும்பூர் - மும்பை விரைவு ரயில், கடற்கரையில் இருந்தும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம், வரும் 10- ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை இருக்கும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0