மோடி அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் 

May 28, 2026 - 19:44
 0  12
மோடி அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் 

மோடி அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் 

 

கேரள முன்னாள் முதல்வர் பினராய் விஜயன் இல்லத்திலும் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அரசியல் உள்நோக்கத்துடன் ரெய்டு நடத்தியதை கண்டித்து திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. இது குறித்த விபரம் வருமாறு;

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள முன்னாள் முதல்வரும், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராய் விஜயன் இல்லம், அவரது மகனின் இல்லம் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை மேற்கொண்ட ரெய்டை கண்டித்தும், இதற்கு எதிராக டெல்லியில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்களை டெல்லி காவல்துறை அராஜகமான முறையில் கைது செய்ததை கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்டக் குழுக்கள் சார்பில் இன்று திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் கோவி. வெற்றிச்செல்வன் மற்றும் சிவராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஸ்ரீதர், மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரங்கராஜன், ரேணுகா, லெனின், கார்த்திக், சந்தானம், சம்பத், மல்லிகா, ரஜினிகாந்த், தியாகராஜன் உள்ளிட்ட திரளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு, ஒன்றிய மோடி அரசின் பழிவாங்கும் அரசியலையும், பாசிச பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் கடுமையாக கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0