ராமதாஸ் ஆதரவு பிரமுகர் மீது கொலை முயற்சி; டெல்டாவில் பதற்றம்
ராமதாஸ் ஆதரவு பிரமுகர் மீது கொலை முயற்சி; டெல்டாவில் பதற்றம்
ராமதாஸ் ஆதரவு பாமக முக்கிய பிரமுகரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலினை இன்று கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு;
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின். இவர் பாமகவை சேர்ந்தவர் ஆவார். இவர் இன்று அலுவலகத்தில் தனது வழக்கமான பணிகள் மேற்கொண்டு வந்தார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல், ம.க.ஸ்டாலின் மீது சணல் குண்டுகளை வீசியது. அத்துடன், அங்கிருந்தவர்கள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தியது. இதில் பேரூராட்சி அலுவலக கண்ணாடி, கதவுகள் சேதமடைந்தது. இந்த தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு தாக்குதலில் இருந்து நல்வாய்ப்பாக ம.க.ஸ்டாலின் உயிர் தப்பினார்.
ம.க.ஸ்டாலின் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ராமதாஸ் அணியைச் சேர்ந்த ம.க.ஸ்டாலின் மீது சணல் குண்டுவீசி கொலை முயற்சி செய்த சம்பவத்தை கண்டித்து ராமதாஸ் பாமகவினர் அப்பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து
சாலையில் டயர்களை கொளுத்தி ராமதாஸ் பாமக ஆதரவு நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பதட்டம் நிலவுகிறது.
இதனால், சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தீயை தண்ணீர் ஊற்றி அணைத்து போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0