கழிவுநீர் சூழ்ந்த உய்யக்கொண்டான் வாய்க்காலை சீரமைத்து தர வேண்டும்- முதல்வருக்கு மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
கழிவுநீர் சூழ்ந்த உய்யக்கொண்டான் வாய்க்காலை சீரமைத்து தர வேண்டும்- முதல்வருக்கு மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய் அப்பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க ஆறுகளில் ஒன்றான உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலந்து மிக மோசமான நிலையில் இருப்பதால் அதை சரி செய்து கொடுக்க வேண்டுமாறு முதல்வருக்கு பொதுமக்கள் சார்பில் மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர். கிஷோர்குமார் தெரிவித்ததாவது;
இராஜராஜ சோழன் தஞ்சை பெருவுடையார் கோவிலை மட்டும் நிர்மாணிக்கவில்லை. கூடுதலாக திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பெட்டவாய்த்தலையிலிருந்து மாநகர் கிழக்கு பகுதி வழியாக தஞ்சை மாவட்டம் சேராண்டி வரை செல்லக்கூடிய நீர்வழி வாய்க்காலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அமைத்தார்.
இந்த வாய்காலுக்கு தனது சிறப்பு பெயரான "உய்யக்கொண்டான் கால்வாய்" என பெயர் சூட்டி மகிழ்ந்தார். இந்த வாய்க்காலின் வழியாக ஏறத்தாழ 120 கிளை வாய்க்கால்கள் வழியாக பாசன நிலங்கள் பயன்பெற்றன. மேலும், திருச்சி மாநகர் பகுதிகளில் சுமார் 9-கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த வாய்க்கால் பயணப்படுகிறது.
கடந்த அரை நூற்றாண்டாக மேற்படி வாய்க்காலை கவனிக்க தவறியதன் வெளிப்பாடு இன்று இந்த நீர்வழி பாதை கழிவுநீர் பாதையாக மாறி, ஆகாய தாமரை படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது.
தமிழக முதல்வர் விஜய் மீதான அளப்பரிய அன்பின் காரணமாக திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் வாக்களித்து வெற்றியை முதல்வருக்கு பரிசளித்தனர். ஆனால், தமிழக முதல்வர் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்த காரணத்தினால் ஒருவித சோகத்தில் வாக்களித்த பொதுமக்கள் உள்ளனர்.
இந்த சோகத்தை சந்தோஷமாக மாற்ற திருச்சி உய்யக்கொண்டான் கால்வாயை மறுசீரமைக்க ஒரு வல்லுநர் குழு ஏற்படுத்தி, தகுந்த நிதி ஒதுக்கி உய்யக்கொண்டான் கால்வாயை மீட்டெடுக்க மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களையும், நீர்வளத்துறை அமைச்சர் புஸ்லி ஆனந்த் அவர்களையும் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0