ஸ்ரீரங்கம் தொகுதி மீண்டும் ஸ்டார் அந்தஸ்தை பெற்றது; ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ்க்கு அமைச்சர் பதவி
ஸ்ரீரங்கம் தொகுதி மீண்டும் ஸ்டார் அந்தஸ்தை பெற்றது; ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ்க்கு அமைச்சர் பதவி
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பிடித்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அரியணை ஏறியது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக திராவிட கட்சிகளை புறம் தள்ளி வெற்றி வாகை சூடியது. இருப்பினும் ஆட்சி அமைக்க போதிய எண்ணிக்கை இல்லாததால், திமுக கூட்டணி கட்சிகளாக இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) ஆதரவுடன் கடந்த மே 10-ம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தைக் கூட்டணிக் கட்சிகள் மட்டுமன்றி அதிமுக எம்எல்ஏ.க்களில் ஒரு பிரிவினரும் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்தனர். சில நாட்களுக்கு முன்பு முதல்வர் மற்றும் 9 அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. கூட்டணிக் கட்சிகளில் யார் யாருக்கு அமைச்சர் பதவி என்ற கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டது. இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,”காங்கிரஸ் எம்எல்ஏ.க்களான செ.ராஜேஷ் குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோரை தமிழக அமைச்சரவையில் இணைக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அனுமதி வழங்கியுள்ளார்.
விஸ்வநாதனுக்கு உயர்கல்விதுறையும், ராஜேஷ்குமாருக்கு சுற்றுலாத்துறையும் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது.
அதன்படி, இன்று காலை 10 மணிக்கு கூட்டணிக் கட்சியினருடன் 23 நபர்கள் அமைச்சர்களாக ஆளுநர் மாளிகையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
அமைச்சர்கள் பட்டியல்:
1. ஸ்ரீநாத் - தூத்துக்குடி எம்எல்ஏ
2. எஸ்.கமலி - அவிநாசி
3. சி.விஜயலக்ஷமி - குமாரபாளையம்
4. ஆர்.வி.ரஞ்சித் குமார் - காஞ்சிபுரம்
5. வினோத் - கும்பகோணம்
6. ராஜீவி - திருவாடானை
7. பி.ராஜ்குமார் - கடலூர்
8. வி.காந்திராஜ் - அரக்கோணம்
9. மதன்ராஜ்.பி - ஒட்டப்பிடாரம்
10. ஜெகதீஸ்வரி.கே - ராஜபாளையம்
11. ராஜேஷ்குமார்.எஸ் - கிள்ளியூர்
12. விஜய்பாலாஜி.எம் - ஈரோடு கிழக்கு
13. லோகேஷ் தமிழ்செல்வன்.டி - ராசிபுரம்
14. விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ - சேலம் தெற்கு
15. ரமேஷ் - ஸ்ரீரங்கம்
16. பி.விஸ்வநாதன் - மேலூர்
17. குமார்.ஆர் - வேளச்சேரி
18. தென்னரசு.கே - ஸ்ரீபெரும்புதூர்
19. சம்பத்குமார்.வி - கோவை வடக்கு
20. முகமது ஃபர்வாஸ்.ஜே - அறந்தாங்கி
21. டி,சரத்குமார் - தாம்பரம்
22. மரிய வில்சன் - ராதாகிருஷ்ணன் நகர்
23. விக்னேஷ்.கே - கிணத்துக்கடவு
மேற்கண்ட அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் ஆளுநர், முதல்வர் முன்னிலையில் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக, தமிழ்நாட்டின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முக்கிய அமைச்சர்கள் போட்டியிட்டு வென்றதாலும், உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் அமைந்துள்ளதாலும் இத்தொகுதி தமிழக அரசியலில் மிக முக்கிய விஐபி தொகுதியாகக் கருதப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு அமைச்சர் அந்தஸ்தை இழந்த ஸ்ரீரங்கம் தொகுதி மீண்டும் தமிழக வெற்றிக்கிழங்கு ஆட்சியில் அமைச்சர் அந்தஸ்தை பெற்று நட்சத்திர தொகுதியாக மின்னுகின்றது. அதுவும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சராக பதவியேற்ற நிலையில் அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0