முதலமைச்சர் விஜய் தரும் ரூ.1 லட்சம் பரிசு!! ஒரே அறிவிப்பில் அரசு அதிகாரிகளுக்கு செக் !!

May 19, 2026 - 17:34
 0  252
முதலமைச்சர் விஜய் தரும் ரூ.1 லட்சம் பரிசு!! ஒரே அறிவிப்பில் அரசு அதிகாரிகளுக்கு செக் !!

முதலமைச்சர் விஜய் தரும் ரூ.1 லட்சம் பரிசு!! ஒரே அறிவிப்பில் அரசு அதிகாரிகளுக்கு செக் !!

தமிழ்நாட்டில் அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியாக இருந்த திமுக தோல்வி அடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. விஜய் தலைமையிலான தவெக 107 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, முஸ்லீம் லீக் கட்சிகள் ஆதரவு தந்தன.

இதனை அடுத்து விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். சட்டமன்றத்திலும் பெரும்பான்மையை நிரூபித்தார். முதலமைச்சராக பதவியேற்ற உடனே சிங்கப்பெண் படை உருவாக்கம், மின்சார கட்டணத்தில் 200 யூனிட் வரை இலவசம் என முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். திமுகவின் புதுமை பெண், தமிழ் புதல்வன், மகளிர் உரிமை தொகை திட்டங்களும் தொடர்வதாக கூறினார். 

இந்நிலையில் முதலமைச்சர் விஜய், தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களில் லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

தன்னுடைய தேர்தல் பரப்புரையிலும் அவர் லஞ்ச ஒழிப்பு குறித்த வாக்குறுதி தந்தார். 

இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் எந்த அரசு துறையாக இருந்தாலும் உங்களிடம் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டால்கூட ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம், புகார் அளிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தவெக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் புகார் அளிக்க 1800 425 1555 (24x7 கட்டணமில்லா எண்) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

குடிநீர் குழாய் இணைப்பு, சான்றிதழ் பெறுவது என பல வேலைகளுக்கும் பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்றால் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பு சாமனிய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த அதிரடி அறிவிப்பால் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில் பொதுமக்களும் இனி அச்சப்படாமல் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் குறித்து புகார் கூறலாம். ஆனால் வேண்டுமென்றே ஊடக வெளிச்சம், இன்ஸ்டா ரீல்ஸ் பெற இதனை தவறாக பயன்படுத்துவோருக்கு சட்ட சிக்கல் உண்டு. நீங்கள் நியாயமாக கேட்கும் விஷயத்திற்கு அதிகாரிகள் முடித்து கொடுக்காமல் லஞ்சம் கேட்கும் பட்சத்தில் அதனை ஆதாரத்துடன் நிரூபணம் செய்யலாம். அரசு அதனை பாராட்டி பரிசும் வழங்கும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0