தாடி முளைத்த நெடும்பனை நூல் வெளியீடு; கவிஞர்கள் பங்கேற்பு

May 15, 2026 - 23:41
 0  38
தாடி முளைத்த நெடும்பனை நூல் வெளியீடு; கவிஞர்கள் பங்கேற்பு

தாடி முளைத்த நெடும்பனை நூல் வெளியீடு; கவிஞர்கள் பங்கேற்பு

ஈனில் இலக்கிய அமைப்பு சார்பில் கலைக் காவிரி பேராசிரியர் சதீஷ்குமரன் எழுதிய கவிதை நூலான "தாடி முளைத்த நெடும்பனை " நூல் குறித்த அறிமுகம் மற்றும் ஆய்வரங்கம் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கவிஞர் கோ. கலியமூர்த்தி தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து பாரதி கலைக்குழு காந்தியின் பாடலுடன் நிகழ்வு தொடங்கியது. சட்டக் கல்லூரி மாணவர்கள் பேச்சாளர் கவிஞர் ஹரிஹரன் வீரப்பன், செல்வி சுபஸ்ரீ செல்வி சண்முகவள்ளி, செல்வி. நித்யா மற்றும் சுஜாதா சஞ்சய் குமார் ஆகியோர் கவிதை நூல் குறித்து அறிமுகம் மற்றும் ஆய்வுரை நிகழ்த்தினர். சாதியம், பெண்ணியம், சமத்துவம், காதல், சமூகம் என பல்வேறு தலைப்புகளில் வளரும் இளம் தலைமுறைகளுக்கே உரிய தனித்துவமான சிந்தனை போக்குடன் ஒவ்வொருவரின் உரையும் அமைந்தது என்றால் அது மிகை இல்லை. 

கௌரா பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் ஜெய்கணேஷ் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வை ஈனில் இலக்கிய அமைப்பின் நிறுவனர் சிறார் எழுத்தாளர் சங்கச் செயல்பாட்டாளர் எழுத்தாளர் கார்த்திகா கவின்குமார் தொகுத்து வழங்கி ஒருங்கிணைத்தார். கவிஞர் சதீஷ் குமரன் ஏற்பரை வழங்கினார். 

நிறைவாக கவிஞர் கலியமூர்த்தி சமகாலத்திற்கு தேவையான பின் உண்மைத்துவம் எனும் இன்றைய நவீன உலகில் நிகழ்ந்துவரும் கோட்பாடுகள் குறித்தும், நெஞ்சுரத்தோடு ஆக்கத்துடன் அச்சமின்றி அறிவுப் பூர்வமாய் செயல்பட வேண்டிய நுட்பங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்விற்கு பெரம்பலூர் கவிஞர் அகவி மற்றும் அங்குசம் யாவரும் கேளீர் பொறுப்பாசிரியர் முனைவர் திருமலை நெடுஞ்செழியன் உள்ளிட்ட சான்றோர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

முடிவில் செல்வி சாய் மகஸ்ரீ மற்றும் சஷ்டிகா ஆகியோர் நன்றி உரையாற்றினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0