ஈரான்-இஸ்ரேல் போர்; இந்தியாவில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Mar 1, 2026 - 00:33
 0  30
ஈரான்-இஸ்ரேல் போர்; இந்தியாவில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஈரான்-இஸ்ரேல் போர்; இந்தியாவில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

உலக நாடுகளின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படைப் பிரிவு, இந்த ஜலசந்தி வழியாக எந்தவொரு கப்பலும் செல்ல அனுமதி இல்லை என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரான் இடையே அமைந்துள்ள இந்த ஹார்முஸ் ஜலசந்தி, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையாகும். உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20% முதல் 30% சதவீதம் வரை இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது.

தற்போது இந்தப் பாதை மூடல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதியை வளைகுடா நாடுகளிடம் இருந்தே இறக்குமதி செய்கிறது. இந்தப் பாதை முடக்கப்பட்டால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருவதுடன், கடுமையான எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படக்கூடும்.

இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகள் தலையிட்டுத் தீர்வு காணாவிட்டால், உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0