நடிகை ஒருவருடன் திருமணம் தாண்டிய உறவில் விஜய்?; தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா யார்?

Feb 27, 2026 - 19:24
Feb 27, 2026 - 19:27
 0  98
நடிகை ஒருவருடன் திருமணம் தாண்டிய உறவில் விஜய்?; தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா யார்?

நடிகை ஒருவருடன் திருமணம் தாண்டிய உறவில் விஜய்?; தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா யார்?

நடிகை ஒருவருடன் திருமணம் தாண்டிய உறவில் விஜய் இருந்ததாக, அவரது மனைவி சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்து விவாகரத்து கோரியுள்ளார்.  

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது.

இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம் எனக்கோரி விவாகரத்து மனுவில் சங்கீதா தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 20-ம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயின் மனைவி சங்கீதா இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர். பெற்றோருடன் லண்டனில் செட்டில் ஆகியிருந்தார். சங்கீதாவின் தந்தை பெரிய தொழிலதிபர். கோடீஸ்வரர். சங்கீதா, விஜயின் நடிப்பில் வெளியான படத்தால் ஈர்க்கப்பட்டார்.குறிப்பாக "பூவே உனக்காக" படத்தில் விஜயின் நடிப்பில் சங்கீதா ஈர்க்கப்பட்டார். இதனால் அவர் விஜயின் தீவிர ரசிகையாக மாறினார். லண்டனில் இருந்து விஜயை சந்திக்க சங்கீதா சென்னை வந்தார். படப்பிடிப்பு தளத்தில் விஜயை, சங்கீதா சந்தித்து பேசினார். தீவிர ரசிகை என்பதை வெளிப்படுத்தி விஜயை புகழ்ந்தார். இது விஜயை கவர்ந்தது.

அதோடு சென்னை வந்த சங்கீதா, விஜய்யின் வீட்டிற்கு அருகிலேயே தங்கியிருந்தார். இதனால் விஜய் அவரை தனது வீட்டிற்கு அழைத்தார். அங்கு விஜய்யின் பெற்றோர்களான இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோரை சங்கீதா சந்தித்தார். முதல் சந்திப்பிலேயே அவர்களுக்கு சங்கீதாவை பிடித்துப்போனது.

அதோடு, விஜய்க்கும், சங்கீதா மீது காதல் இருப்பதை சந்திரசேகர் - ஷோபா உணர்ந்தனர். இதனால் சங்கீதாவை திருமணம் செய்கிறாயா? என விஜயிடம் தந்தை சந்திரசேகர் கேட்டார். அதற்கு விஜய் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இருகுடும்பத்தினரின் ஏற்பாட்டில் பிரமாண்டமாக விஜய் - சங்கீதா திருமணம் கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி வந்தது.

இந்த தம்பதிக்கு 2000ம் ஆண்டில் மகன் பிறந்தார். அவரது பெயர் ஜேசன் சஞ்சய். 2005ம் ஆண்டில் மகள் பிறந்தார். அவர் பெயர் திவ்யா சாஷா. ஜேசன் சஞ்சய் 'வேட்டைக்காரன்' படத்தில் 'நான் அடித்தால் தாங்கமாட்ட' பாட்டில் வந்து செல்வார். மகள் திவ்யா சாஷா 'தெறி' படத்தின் கிளைமேக்சில் வருவார். சங்கீதா பல்வேறு நிகழ்ச்சிகளில் விஜயுடன் சேர்ந்து பங்கேற்று வந்தார்.

ஆனால், கடந்த 2023ம் ஆண்டில், அவர்களின் விவாகரத்து வதந்திகள் இணையதளங்களில் பரவ தொடங்கியது. இயக்குநர் அட்லியின் மனைவியின் வளைகாப்பு மற்றும் விஜய்யின் 'வாரிசு' பட டிரெய்லர் வெளியீட்டு விழாக்களில் சங்கீதா இல்லாமல் விஜய் மட்டுமே பங்கேற்றார். அப்போதே விவாகரத்து தொடர்பான செய்திகள் வெளியாகின.

ஆனால் விஜய் - சங்கீதா தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருவரும் அமைதியாக இருந்தனர். இதனால் அது யூகமாக கருதப்பட்ட நிலையில் தற்போது சங்கீதா தனது கணவர் விஜயிடம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தற்போது விஜய் அரசியலில் நுழைந்துள்ள நிலையில் அவரது மனைவி விவாகரத்து கோரி இருப்பது விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0