9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலை மறியல் - 200 பேர் கைது

Feb 10, 2026 - 16:05
 0  61
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலை மறியல் - 200 பேர் கைது

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலை மறியல் - 200 பேர் கைது

திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது. 

இதன் வாயிலாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலை அலுவலர்களின் உயர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும், சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவைத்துறை அலுவலர்களின் கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் தனி ஊதியம் வழங்கிட வேண்டும் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியத்தை வழங்கிட வேண்டும் தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10% பங்களிப்பு தொகையை ரத்து செய்திட வேண்டும், 2003 ஆம் ஆண்டு முதல் செலுத்திய பங்களிப்பை வட்டியுடன் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு கொண்டு சென்று வழங்கிட வேண்டும் அரசு பணியின் போது உயிரிழக்கும் அந்த ஊழியரின் குடும்பத்தின் நிலை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் நியமனத்திற்கு உச்சவரம்பு ஏற்கனவே இருந்ததைப் போல் 25% ஆக நிர்ணயம் செய்திட வேண்டும், பணி காலத்தில் உயிரிழக்கும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உரிய பணி வழங்கிட வேண்டும், இந்த மூன்று துறைகளிலும் ஒப்பந்த தற்காலிக வெளி முகமை தொகுப்பு ஊதிய முழுமையாக கைவிட வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பணிநெருக்கடிக்கு ஏற்படுவதை தடுக்கவும் களப்பணி என்பது உரிய கால அவகாசம் வழங்குவதையும் உயர் அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும், பேரிடர் காலங்கள் தவிர கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வட்ட எல்லைக்குள் தங்கி இருந்து பணிபுரிய ஏதுவாக தமிழ்நாடு அமைச்சுப் பணி விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படும் கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியை படிப்படியாக நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன போன்ற ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பிரேம்குமார், விட்டுச் செல்வம், அய்யனார், நாகராஜன், ராஜேந்திரன், மகேஷ் ஆகியோர் தலைமையில் வருவாய் துறை சங்கங்களில் கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.. இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆட்சியர் அலுவலக சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களே தடுத்து நிறுத்தி சாலை மறியலை கைவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தினர் போலீசார் கூறியதையும் மீறி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முன்னேறிச் சென்றதால் 200 பேரை போலீசார் கைது செய்து அரசு பேருந்தில் ஏற்றி சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலக சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0