திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம்; அச்சாணி முறிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி

Feb 22, 2026 - 16:28
 0  24
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம்; அச்சாணி முறிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம்; அச்சாணி முறிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி

பஞ்சபூத தலங்களில், நீர் தலமான திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவிலில் நடைபெற உள்ள பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு தேர் பழுது நீக்கும் பணிகள் சமீபத்தில் நடைபெற்றது.

இந்தப் பணி முடிந்து திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் இன்று சாமி தேர், அம்மன் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்தனர். இது குறித்த விபரம் வருமாறு;

திருவானைக்காகோயிலில் பங்குனி தேரோட்டம் மார்ச் 20-ல் நடைபெற உள்ளது. இதனை யொட்டி சாமி தேர் மற்றும் அம்மன் தேர் ஆகியவற்றின் இரும்பு சக்கரங்கள் ரூ.3.50 லட்சத்தில் பழுது பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று காலை முதலில் சாமி தேர் முன்பு பூஜை செய்யப்பட்டு சாமி தேர் சிறிது தூரம் இழுக்கப்பட்டு மீண்டும் நிறுத்தப்பட்டது. அதேபோன்று அம்மன் தேர் வடக்கு ராஜ வீதி திருப்பத்தை கடந்து சிறிது தூரம் சென்றவுடன் அம்மன் தேரில் உள்ள அச்சாணி தடம் புரண்டு நின்றது. இதில் அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகத்தினர் மீண்டும் தேரை இரண்டு ஜேசிபி இயந்திரம் மூலம் நிலைக்கு கொண்டு சென்றனர்.

ரூ.3.50 லட்சத்தில் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் அதே நிலைக்கு சென்றதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோயில் நிர்வாகத்தினர் அம்மன் தேரை நான்காம் பிரகாரம் முழுவதும் சுற்றிவர முடிவு செய்திருந்த நிலையில் பாதி கடந்த தூரத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம் என பக்தர்கள் குற்றம் சாட்டினர். கோயில் நிர்வாகத்தினர் மீண்டும் அம்மன் தேர் சக்கரங்கள் பழுது பார்க்கப்படும் என்று தெரிவித்தனர். இந்த தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில்

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0