புனித மரியன்னை பேராலயத்தில் யூஜின் குருத்துவ வெள்ளி விழா கோலாகலம்; அமைச்சர்கள் பங்கேற்பு

Feb 14, 2026 - 20:46
 0  57
புனித மரியன்னை பேராலயத்தில் யூஜின் குருத்துவ வெள்ளி விழா கோலாகலம்; அமைச்சர்கள் பங்கேற்பு

புனித மரியன்னை பேராலயத்தில் யூஜின் குருத்துவ வெள்ளி விழா கோலாகலம்; அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ்ஸின் மூத்த சகோதரர் அருட்திரு. எல்.வி. யூஜின் என்பவரின் குருத்துவ வெள்ளி விழா, புனித மரியன்னை பேராலயத்தில் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பேராலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

இந்த விழாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், நெடுஞ்செழியன், மேயர் அன்பழகன், மாநகராட்சி கோட்ட தலைவர் மதிவாணன், மாநகர செயலாளர் வைரமணி, திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே ஆர் ஆர் ராஜலிங்கம், திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.எம். சரவணன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெனட் அந்தோணிராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே என் சேகரன், அஇஅதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் குணா, ஆனந்தமாணிக்கம், அனைத்து மறைமாவட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரர், அருட்சகோதிரிகள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.

முன்னதாக, குருத்துவ வெள்ளி விழா என்பது கத்தோலிக்க திருச்சபையில் ஒரு அருட்பணியாளர் (பாதிரியார்) திருநிலைப்படுத்தப்பட்டு (Ordination), 25 ஆண்டுகள் இறைப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு நிறைவு செய்ததைக் கொண்டாடும் ஒரு நன்றியறிதல் நிகழ்வாகும். பல்வேறு சவால்கள் நிறைந்த பாதையில், இறைமக்களுக்குப் பணிபுரிந்ததற்காக நன்றி செலுத்தும் விழாவாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0