பிரதமர் மோடி மதுரை வருகை; ஏற்பாடுகள் தீவிரம்

Feb 18, 2026 - 13:16
 0  12
பிரதமர் மோடி மதுரை வருகை; ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் மோடி மதுரை வருகை; ஏற்பாடுகள் தீவிரம்

மார்ச் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் கூட்டணியின் தற்போதைய தலைவர்களுடன், புதிதாக இணையும் கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பிரதமரின் இந்த பயணத்தை முன்னிட்டு கட்சி அமைப்புகள் தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.

பிரதமரின் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தலைமையில் மாநில அளவில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை பயணத்திற்கான பொறுப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர்கள் எம்.முருகானந்தம், ராம சீனிவாசன், பொன் வி. பாலகணபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனைகள் மற்றும் தொண்டர்களை திரட்டுதல் போன்ற பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

மதுரையைத் தொடர்ந்து, மார்ச் 6-ம் தேதி வேலூரில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்திலும் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0