மகளிர் புதிய லயன்ஸ் சங்கம் துவக்க விழா உற்சாகம்
மகளிர் புதிய லயன்ஸ் சங்கம் துவக்க விழா உற்சாகம்
திருச்சியில் 3242F லயன்ஸ் மாவட்டத்தின் சார்பாக முற்றிலும் பெண்களால் மட்டுமே இயங்கும் "ஸ்ரீரங்கம் காவேரி" என்ற புதிய சங்கம் துவங்கப்பட்டது. பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவும் சேவை திட்டங்களை வழங்குவதே இச்சங்கத்தின் நோக்கம்.
மாவட்ட ஆளுநர் லயன் மணிவண்ணன் இந்த புதிய சங்கத்தை துவக்கி வைத்து, நிர்வாகிகளை பணியமர்த்தினார். சங்கத்தின் தலைவராக லயன் விஜயலட்சுமி வெங்கடேசன், செயலராக லயன் செல்வி அருண்குமார், பொருளராக லயன் ஷகிலா பானு ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் மூத்த லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இணைச் செயலாளர் லயன் ஜெயந்தி சுந்தர் நன்றி பாராட்டினார். இந்த புதிய சங்கத்திற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் லயன்ஸ் சங்கத்தினர் செய்திருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0