மகாசிவராத்திரி; வெள்ளியங்கிரி மலையில் சிவாய கோஷத்துடன் குவிந்த பக்தர்கள்

Feb 15, 2026 - 15:39
 0  32
மகாசிவராத்திரி; வெள்ளியங்கிரி மலையில் சிவாய கோஷத்துடன் குவிந்த பக்தர்கள்

மகாசிவராத்திரி; வெள்ளியங்கிரி மலையில் சிவாய கோஷத்துடன் குவிந்த பக்தர்கள்

கோவை வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் மலையில் மகாசிவராத்திரி வழிபாடு நடத்த தமிழகம் முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திரண்டுள்ளனர். இது குறித்த விபரம் வருமாறு ;

உலகம் முழுவதும் உள்ள சிவ பக்தர்கள் இன்று சிவனை நாடி மகாசிவராத்திரி வழிபாடு நடத்தி வருகின்றனர். 

அந்த வகையில, சிவ பக்தர்களின் விருப்ப தளங்களில் முதன்மையான கோவை மாவட்டம் பூண்டி வெள்ளியங்கிரி மலையில் எழுந்தருளிய வெள்ளியங்கிரி சுயம்பு லிங்கத்துக்கு பூஜை செய்து, வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். வழக்கமான நாட்களை விட இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். 

பக்தர்களின் வருகையை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை ஆன்மீக விழா கோலம் பூண்டது. 

காலையில் சூரியன் உதித்த உடன் வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு நடந்த பூசையை, பக்தி பரவசத்துடன் சிவ பக்தர்கள் தரிசித்தனர். ஓம் நமச்சிவாய, சிவாய போற்றி என்றும், அரோகரா அரோகரா என்றும் சிவநாமத்தை முழங்கி பக்தர்கள் பக்தி பரவசப்பட்டனர். பக்தர்களின் வருகையை முன்னிட்டு பல்வேறு அடிப்படை வசதிகளும், ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சிவ கணேஷ், மகாசிவராத்திரியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளிங்கிரி மலை ஏறி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்கின்றனர். பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை உணர்வு பூர்வமாக நினைத்து உருகி வேண்டும் பொழுது, வெள்ளிங்கிரி ஆண்டவர், பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி அருள் ஆசி தருவார் என்பதில் ஐயமில்லை. வெள்ளியங்கிரி மண்ணில் கால் பதிக்கும் பக்தர்களுக்கு, அனைத்து சகல சௌக்கியங்களும் வெள்ளியங்கிரி ஆண்டவர் அருளால் கிடைக்கும்.

இந்த நிலையில், பக்தர்கள் வழக்கத்தை விட கூடுதலாக மகாசிவராத்திரி இன்று வெள்ளியங்கிரிக்கு வருகை புரிவதனால், வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்களுக்கு ஏழு மலைகளிலும், போதுமான உணவு குடிநீர் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. பக்தர்கள் நெகிழி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்த சிவ கணேஷ், வெள்ளியங்கிரி மலையை காதல் தன்மை மாறாமல் பக்தர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0