திருச்சி மண்டலத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு 

May 15, 2026 - 11:34
 0  39
திருச்சி மண்டலத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு 

திருச்சி மண்டலத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு 

திருச்சி மண்டலத்தில் இணைய வழி மின் கட்டணம் செலுத்தும் தரவுகள் மேம்படுத்துதல் நடைபெறுவதால் இனிய வழி கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது ; 

திருச்சி மின்பகிர்மான வட்டம் / பெருநகரம் / திருச்சியின் கணினி தரவு வழங்கிகளை மேம்படுத்தும் பணி திருச்சி மண்டலத்தில் நடைபெறுவதால் இணையவழி சேவை நிறுத்தம் செய்யப்பட இருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து கட்டணக் கடைசி தேதி 16.05.2026 உள்ள மின்நுகர்வோர்களின் நலன் கருதி இணையவழி மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. கட்டணக் கடைசி தேதி 16.05.2026 அன்று உள்ள நுகர்வோர்களின் வசதிக்காக, கால அவகாசம் மேலும் ஒரு நாள் 18.05.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, திருச்சி மண்டல நுகர்வோர் அதற்கேற்ப திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த சிறிய இடையூறுக்கு வருந்துகிறோம்.

மேற்கண்டவாறு திருச்சி மண்டல மின் பகிர்மான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0