717 மதுக்கடைகள் மூடல் ; மக்கள் சக்தி இயக்கம் வரவேற்பு
717 மதுக்கடைகள் மூடல் ; மக்கள் சக்தி இயக்கம் வரவேற்பு
பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான பேருந்து நிலையம், பள்ளி, கல்லூரிகள், ஆலயங்கள் உள்ள பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூடக்கோரி எழுந்த கோரிக்கைகளுக்கு இன்று ஆட்சி மாற்றத்தினால் பலன் கிடைத்திருக்கிறது.
டாஸ்மாக் மதுபான கடைகளை மூடக்கோரி எழுந்த கோரிக்கைக்கு அதிரடியாக இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தமிழக முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார்.
அந்த வகையில் திருச்சியில் 16 கடைகள் மூடப்படுகின்றன. முதலில் மூடப்பட்டுள்ள கடை திருச்சி கலைஞர் அறிவாலயம் எதிரே உள்ள எலைட் ஷாப் டாஸ்மாக் மதுபான கடை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மீதமுள்ள கடைகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி ஒவ்வொன்றாக மூடப்படும் என டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூறும் இடம் பள்ளி கல்லூரி அருகில் இருக்கக்கூடிய இலை உள்ளிட்ட மனமகிழ் மன்ற மதுபானக்கூடங்களும் விரைவில் மூடப்படுவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் நீலமேகம் தெரிவிக்கையில்; கோவில், கல்வி நிறுவனகங்கள், பேருந்துநிலையம் அருகில் உள்ள மதுபான கடைகளை முட உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு மக்கள் சக்தி இயக்கம் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. . தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
சிறுவர்கள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள், இளம் பெண்கள் என பலரும் தற்போது போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் அடிமையாவதோடு மற்றொருபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, சமூக விரோத செயல்கள் போன்றவை அதிகரித்து வருகின்றன.
இதன் காரணமாக எந்த அரசியல் கட்சியும் குறிப்பிட்ட வகையில் தமிழக வெற்றிக் கழகம் மட்டும் போதை பொருட்களை ஒழிக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக கூறியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கூல்லிப், ஹான்ஸ் என்ற போதை வஸ்துக்களின் புழக்கம் அதிக அளவில் உள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக கஞ்சா நடமாட்டம் எப்போதும் இல்லாத வகையில் தற்போது அதிகரித்துள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை அமைத்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டதை வரவேற்பதுடன் மக்கள் சக்தி இயக்க சார்பில் பாராட்டுகிறோம்.
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றவுடன் மதுபான கடைகளின் எண்ணிக்கையை குறைக்க உத்தரவிடுவது பாராட்டுக்குரியது. கோவில், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையம் அருகில் உள்ள 717 மதுபான கடைகளை கணக்கெடுத்து மூட நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளதையும்,மேலும் தமிழகத்தில் முழு மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் சக்தி இயக்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என நீலமேகம் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0