நேரு அரங்கம் அதிர அண்ணா, எம்ஜிஆர் வரிசையில் விஜய், கோட் சூட் உடன் முதல்வராக பதவியேற்பு;

May 10, 2026 - 10:47
 0  28
நேரு அரங்கம் அதிர அண்ணா, எம்ஜிஆர் வரிசையில் விஜய், கோட் சூட் உடன் முதல்வராக பதவியேற்பு;

நேரு அரங்கம் அதிர அண்ணா, எம்ஜிஆர் வரிசையில் விஜய், கோட் சூட் உடன் முதல்வராக பதவியேற்பு;

2024 பிப்ரவரி 2ஆம் தேதி கட்சி தொடங்கிய விஜய், இரண்டே ஆண்டுகளில் அரியணையில் அமர்ந்துள்ளார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சி அரியணையிலும் அமர்ந்தது. கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து திரைத்துறையில் இருந்து மேலும் ஒருவர் முதல்வராகியுள்ளார். அண்ணாதுரை முதல்வராவதற்கு முன்பு பல்வேறு திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள விஜய் முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார். அரசியல் கதைகளை தேர்வு செய்து நடித்த விஜய் அதில் அனல் பறக்கும் அரசியல் வசனங்களையும் பேசினார்.

2009 ஆம் ஆண்டு ரசிகர் மன்றம் தொடங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவந்தார். 2011 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக விஜய் பரப்புரை செய்தார். 2021 உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்ந்த நிர்வாகிகள் போட்டியிட்டு 115 இடங்களில் வென்றனர். பின்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், தேர்தல் ஆணையத்தில் அதனை பதிவு செய்தார். 

2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத விஜய், நேரடியாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரியணை ஏறி சரித்திரம் படைத்துள்ளார். 

தமிழ்நாட்டில் 59 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட கட்சிகள் அல்லாத அரசாங்கம் அமைந்துள்ளது.

சரியாக 10.19 மணித்துளிகளுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தமிழகத்தின் 18-வது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்க்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவிப் பிரமாணத்தின்போது ஆளுநர் முன், சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று விஜய் உறுதிமொழி கூறியபோது அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த தவெக தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி கூறுகிறேன் என்ற அவரது ஆரம்பக் கால பிரச்சாரத்தின் வரிகளை துவக்கி, பின்னர், அரசியல் சாசனப்படி உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பதவி ஏற்றார் நடிகரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய்.

பின்னர் புஸ்லி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், டாக்டர் பிரபு, செல்வி கீர்த்தனா உள்ளிட்ட ஒன்பது பேர் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஆளுநர் தமிழிசை, கூட்டணி கட்சித் தலைவர்கள், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, லாட்டரி அதிபர் மார்ட்டின், லாட்டரி அதிபர் மனைவியும் லால்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான லீமா ரோஸ், விஜய்யின் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

தமிழ்நாட்டில் 59 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட கட்சிகள் அல்லாத அரசாங்கம் அமைந்ததுள்ளது.

விஜய்யின் மனைவி மகன் மகள் கலந்து கொள்ளவில்லை என்பதும், வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, 3-வதாகவே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0